Header Ads



சவூதியில் கண்டு பிடிக்கப்பட்ட, தமயந்தி இலங்கையில்

கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் றியாத் நகரிலுள்ள வீடொன்றுக்கு பணிப்பெண்ணாக கடமையாற்றச் சென்ற அநுராதபுரம், இப்ளோகம பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய குடும்பப் பெண்ணொருவர், நேற்று புதன்கிழமை (25) நாடு திரும்பினார். 

இந்நிலையில், நாடு திரும்பிய அவர் பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து அமைச்சர் தலத்தா அத்துகோரலவை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, அப்பெண் றியாத்தில் பணியாற்றியதற்காக 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையொன்றை அப்பெண்ணிடம் அமைச்சர் கையளித்தார். 

தமயந்தி என்ற இந்தப் பெண், றியாத்தில் வேலைவாய்ப்புக்குச் சென்ற நாள் முதல் எவ்வித தொடர்பும் அற்றிருந்தார். றியாத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகள் அப்பெண்ணை கடந்த 13 வருடங்கள் தேடியதில் கடந்த மாதமே அவரை கண்டுபிடித்தனர். இந்நிலையில், அப்பெண் கடமையாற்றிய வீட்டை அனுகி அவரை மீட்டுள்ளனர். 

தான் வெளிநாடு செல்லும்போது கணவனின் பராமரிப்பில் விட்டுச்சென்ற ஒரு வயது குழந்தையை 13 வருடங்களின் பின்னர் நேற்றே கட்டியணைத்தார்.  அவர் வெளிநாடு செல்லும்போது  அவருக்கு 5 குழந்தைகள் இருந்தன. அவர்களில் இரு பெண் பிள்ளைகள் தற்போது திருமணம் முடித்துள்ளனர். வறுமை காரணமாக அவ்விரு பெண்களும், தத்தமது குழந்தைகளை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தனது குடும்பத்துக்கென வீடொன்றை நிர்மாணிப்பதற்காகவும் 5 குழந்தைகளை வளர்த்து கரைசேர்ப்பதற்காகவுமே தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடியதாகத் தெரிவித்த தமயந்தி, றியாத்தில் தான் பணியாற்றிய எஜமானார் வீட்டில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும் உடை, உணவு, சம்பளம், தொலைத்தொடர்பு எதுவுமே வழங்காத நிலையில் தன்னிடம் அவர்கள் வேலை வாங்கியதாகவும் கூறினார். 

அத்துடன், றியாத்துக்கு போன சில நாட்களிலேயே தன்னை சிரியாவுக்கு அழைத்துச் சென்ற எஜமான், மீண்டும் றியாத்துக்கு அழைத்து வந்தே மேற்படி வீட்டில் தங்கவைத்ததாகவும் கூறினார். 13 வருடங்களின் பின்னர் தன்னைக் கண்டுபிடித்த றியாத்தில் உள்ள தூதுவராலயத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சேப் ஹவுசிங் அதிகாரிகள், தன்னை சேப் ஹவுசில் தங்கவைத்ததுடன் தான் பணியாற்றிய சவூதி எஜமானிக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததாக கூறினார். 

2 comments:

  1. என்ன வழக்கு தொடர்ந்து என்ன பயன் ஓன்றும் நடக்கபோவதில்லை ஈன இரக்கமற்ற இஸ்லாத்தை கேவலப்படுத்தும் காட்டு மிராண்டிகள் ...

    ReplyDelete
  2. சிரிய மடயர்களை தண்டிக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.