Header Ads



பிடிவாதமே கிழக்கு மாகாண சபையின் இழுபறிக்கு காரணம் - பிரதியமைச்சர் அமீர் அலி

-அனா-

இன்று கிழக்கு மாகாணத்திலே தனியாகவே ஆட்சியை செய்ய வேண்டும் என்கின்ற நிகழ்ச்சி நிரலில் மிகவும் பிடிவாதமாக இருந்த காரணத்தினால்தான் மீண்டும் முதலமைச்சர் விடயத்திலே இழுபரி ஏற்பட்டுள்ளதாக சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையில் 2014ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (02.03.2015) கல்லூரி முதல்வர் ஏ.ஜி.பிர்தௌஸ் தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம் பெற்ற பொதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். 

விட்டுக் கொடுப்புக்களுக்கு அப்பால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெளிவாக பேசி இருக்க வேண்டும் கிழக்கு மாகணத்திலே இனி வரப்போகின்ற தேர்தலிலே ஆளுந்தரப்பை நிர்னயிக்கின்ற அணியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கப் போவது என்பதில் எவரும் மாற்றுக்கருத்தக் கொள்ளத் தேவையில்லை.

இம்முறை கிழக்கு மாகாண சபையில் 11 ஆசனங்களைப் பெற்றிரக்கின்றார்கள் எதிர்வரும் காலங்களிலே போனஸ் ஆசனங்கள் அடங்களாக 16 ஆசனங்களை எடுத்து ஆட்சி அமைக்கின்ற நிகழ்வுகள் வருகின்ற போது கௌரவமான முறையில் அதில் பங்கை எங்களுக்குத் தரவேண்டும் என்று அவர்கள் இருப்பார்கள் என்று நான் மிகவம் தெளிவாக இருக்கிறேன்.

அந்த எதிர்பார்ப்புக்கு நாங்கள் இப்பொழுது செய்ய வேண்டியது அவர்களுடைய எதிர்பார்ப்பில் 100 வீதம் கொடுக்க முடியா விட்டாலும் முடிந்தவரை அவர்களது கோறிக்கைகளை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் கிழக்கு மாகாணத்திலே காலங்காலமாக அதிகாரங்களை பெற்றுக் கொள்ள முடியாத ஒரு காலகட்டம் ஏற்பட்டுப் போகலாம்.

அரசியல் என்பது உடனடிப் பிரச்சினைக்கு உடனடி தீர்மானம் கான்கின்ற விடயம் மாத்திரம் அல்ல எதிர்காலத்திலே வரக்கூடிய பிரச்சினையை மையப்படுத்தி ஒரு தூர நோக்கத்தோடு நாங்கள் செயற்பட வேண்டும். கிழக்கு மாகாண சபை இவ்வாறு தொடர்ந்து பிரச்சினைகளோடு நடந்து கொண்டு இருக்கும் என்று சொன்னால் நான் நினைக்கிறேன் அவசர அவசரமாக மாகாண சபை கழைக்கப்படலாம் என்ற ஒரு விடயமும் அதில் மறைந்து கிடக்கின்றது என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.