Header Ads



றிசாத்திற்கும், ஹுனைஸுக்கும் கொழும்பில் என்ன வேலை..?

வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தலைமையில் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சென்றடைந்த ஜனாதிபதியை முதலமைச்சர் விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்  மாகாணத்தைச் சேர்ந்த அரச அதிபர்கள், உயரதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இருந்தபோதும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் ஹுனைஸ் பாருக் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் கொழும்பில் இருப்பதை ஜப்னா முஸ்லிம் இணையம் உறுதிப்படுத்திக் கொண்டது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின் யாழ்ப்பாணத்திற்கு செல்வது இது முதற்தடவையாகும். புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட வடக்கு முஸ்லிம்களில் ஒரு தொகையினர் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்துவரும் நிலையிலும், வடக்கில் தமிழ் அதிகாரிகளின் பாரபட்சம் தொடரும் நிலையிலும் வடமாகாணத்ததைச் சேர்ந்த குறித்த இந்த 2 முஸ்லிம் அரசியல் வாதிகளும் மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பங்குகொள்ளாமை துரதிஷ்டவசமானதே என்பதை ஜப்னா முஸ்லிம் இணையம் சம்பந்தப்பட்ட இருவருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மீள்குடியேற்றம், வேலை வாய்ப்பு, அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட முக்கிய விவகாரங்கள் ஆராயப்படும் போது இதில் வடக்கு முஸ்லிம் விடயங்கள் தவிர்க்கப்பட முடியாதவை என்பது கவனிக்கத்தக்கது.

No comments

Powered by Blogger.