Header Ads



இலங்கை எமது, மூலோபாய பங்காளி - சீன ஜனாதிபதி

இலங்கை சீனாவின் மூலோபாய பங்காளி என சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்ங் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்று பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சீனா, இலங்கையை ராஜதந்திர ரீதியில் பிராந்தியத்தில் முக்கிய இடத்தில் வைத்துள்ளது எனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பீஜீங்கில் சீன ஜனாதிபதியுடன் இருத்தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கடும் சீன சார்ப்பு கொள்ளைகளை கொண்டிருந்தார். இந்த நிலையில், புதிய வெளிநாட்டு கொள்கைகளை பின்பற்றி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த சீன விஜயம் முக்கியத்துவமானது எனக் கூறப்படுகிறது.

ஊழல் மற்றும் சுற்றுச் சூழல் காரணங்களை காட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சீனாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித்திட்டம் குறித்து இதன் போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டத்திற்கு சீனா 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்கியுள்ளதுடன் சீன நிறுவனம் ஒன்றை இந்த திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

அதேவேளை சீனாவின் நிதியுதவியில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களையும் மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனா தனது பொருளாதார மற்றும் இராணுவ பலத்தை அதிகரித்து வருவது குறித்து இந்தியா அதிருப்தி கொண்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனா மற்றும் இந்தியாவுக்கான இலங்கையின் தொடர்புகளில் சமநிலையை பேணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.