Header Ads



ரிசாட் பதியூதீன் பதவி விலக வேண்டும் - அரியநேத்திரன்

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியவில்லை என்றால் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகவேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

நிலுவையிள்ள சம்பளத்தை வழங்குமாறு கோரும் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை ஊழியர்களுக்கு 05 மாத நிலுவை சம்பளம் வழங்கபடாமையால் மீண்டும், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழியர்களுக்கான சம்பள நிலுவைக்கு தேவையான நிதி திறைச்சேரியிலிருந்து ஒதுக்கப்படும் பட்ச்சத்தில் இன்று அல்லது நாளை சம்பளம் வழங்கப்படும் என பொது முகாமையாளர் அநுர ரவீர குறிப்பிட்டார்.

05 மாத சம்பள நிலுலையை வழங்குமாறு கோரி கடந்த சில நாட்களாக வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை அடுத்து நேற்றைய தினத்திற்குள் சம்பள நிலுவை வழங்கப்படும் என தொழிற்சாலையின் முகாமைத்துவம் உறுதிமொழி வழங்கிய பிறகும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் தலைமை அலுவலகத்திலுருந்து தவிசாளரால் கையொப்பமிடப்பட்ட  தொலைநகல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் வரை போராட்டம் தொடரும் எனவும் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், இந்த தொழிற்சாலை ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்க அமைச்சர் ரிஷாட் பதியூதீன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.