Header Ads



மகிந்தவை பிரதமராக்கும் கூட்டத்தில், 26 எம்.பி.க்கள் பங்கேற்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 26க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வெற்றி கொண்ட சுதந்திரம் ஆபத்தில், தேசிய சவாலை வெற்றி கொள்ள அணிதிரள்வோம் என்ற தெனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டம் இரத்தினபுரி சீவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பன இணைந்து மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த கூட்டத்தை நடத்தி வருகின்றன.

மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே, லொஹான் ரத்வத்தே, காமினி லொக்குகே, மனுஷ நாணயக்கார, உதித்த லொக்குபண்டார உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 26க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களை தவிர மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில, வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் கலைஞர்களும், புத்திஜீவிகள் சிலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.