Header Ads



ரணில் விக்கிரமசிங்கவின் கனவு விரைவில் கலைந்துவிடும் - நிமல் சிறி­பால சில்வா

நூறு நாட்கள் வேலைத்­திட்டம் முடியும் வரை­யிலேயே தேசிய அர­சாங்கம் நடை­மு­றையில் இருக்கும். அடுத்த பொதுத்­தேர்­தலின் பின்­னரும் தேசிய அர­சாங்­கத்­தினை கொண்டு செல்ல முடி­யாது என்று எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா தெரிவித்தார்.

தொடர்ந்தும் தேசிய அர­சாங்­கத்­தினை கொண்டு செல்ல முடி­யு­மென ரணில் விக்­கி­ர­ம­சிங்க கனவு காணக்கூடாது. பிர­தமர் கனவு இன்னும் சிறிது காலத்­திற்கே எனவும் அவர் குறிப்­பிட்டார்.

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலின் பின்­னரும் தேசிய அர­சாங்­கத்­தினை முன்­னெ­டுப்போம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ள நிலையில் தேர்­தலின் பின்­னரும் தேசிய அர­சுடன் செயற்­பட தயாரா என வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தேசிய அர­சாங்­கத்தின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைவர். நாம் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்கள். எனவே இந்த மூன்று விட­யங்­களும் ஒன்­றுடன் ஒன்று தொடர்­பு­பட்­ட­த­னால்தான் நாம் தேசிய அர­சாங்­கத்­துடன் தொடர்­பு­பட்­டுள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்­தினை அமைத்­தி­ருந்­தாலும் நாம் இப்­போதும் எதிர்க்­கட்­சி­யா­கவே உள்ளோம். 

எனவே ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் எமக்கு எவ்­வி­த­மான தொடர்பும் இல்லை. அதேபோல் 19ஆவது திருத்­தச்­சட்டம் உள்­ளிட்ட தேசிய அரசின் நூறு நாட்கள் வேலைத்­திட்­டத்தில் நல்ல விட­யங்­களை ஆத­ரிப்­ப­தற்கு நாம் தயார். ஆனால் நூறு நாட்கள் வேலைத்­திட்டம் முடி­வ­டைந்த பின்னர் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட வேண்டும். அதன் பின்னர் தனிக்­கட்சி அர­சாங்கம் அமையும். எனவே தேசிய அர­சாங்கம் இந்த நூறு நாட்கள் வரை மட்­டுமே வாழும்.

மேலும் பொதுத்­தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் முன்­னெ­டுக்­கப்­ப­டாது. ஆனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ந்தும் தேசிய அர­சாங்­கத்தில் தம்மை தக்க வைத்­துக்­கொள்ள முடியும் என நினைக்­கின்றார். இவர்­களின் எண்ணம் நிறை­வே­றப்­போ­வ­தில்லை. பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் 23ஆம் திகதி கலைக்­கப்­ப­டு­மாயின் அதன் பின்னர் பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி வெற்றி பெற்று பாரா­ளு­மன்றில் ஆட்­சி­ய­மைக்கும். மக்­களின் ஆத­ர­வின்றி தொடர்ந்தும் பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க செயற்படலாம் என கனவு காண்கின்றார். இந்த கனவு நூறு நாட்கள் முடிவடையும் வரை மட்டுமே. நூறு நாட்களின் பின்னர் பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் கனவு கலையும் எனவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.