Header Ads



விமானத்தின் கதவை கோடாரியால், உடைக்கமுயன்ற விமானி


ஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமான அறையின் கதவை கோடாரியை கொண்டு விமானி உடைக்க முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனியில் வெளிவரும் தினப்பத்திரிகையான Bild, இன்று விமான விபத்து குறித்த புதிய தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், ஜேர்மன் விங்க்ஸின் முதன்மை விமானி வெளியே சென்றவுடன், அங்கிருந்த துணை விமானியான Andreas Lubitz அறையின் கதவை மூடியதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்திற்கு பிறகு அறைக்கு திரும்பிய முதன்மை விமானி மூடியிருந்த கதவை திறக்கும்படி மெதுவாக தட்டியுள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து கதவை திறக்க போராடிய விமானி,இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக, கோடாரியை எடுத்து வந்து கதவை உடைத்தெரிய முயற்சித்ததாக ஜேர்மனிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், விமான கதவை பலம் கொண்டு தாக்கிய ஒலிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ஜேர்மனியில் உள்ள துணை விமானியின் வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள் சில முக்கிய பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

இருப்பினும், துணை விமானி தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரங்கள் தற்சமயம் வரை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனிய பத்திரிகைகள் வெளியிட்டு வரும் செய்திகளில் ‘துணை விமானி சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு உறுதியான எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.