Header Ads



இலங்கையில் தேடப்பட்டு வரும் 60 பேர், மலேசியாவில் மறைந்து வாழ்கின்றனர்

இலங்கை பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் 60 பேர் மலேசியாவில் மறைந்து வாழ்வதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாரியளவிலான வற் வரி மோசடியாளர்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பல்வேறு கொலைகளுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்கள் இவ்வாறு மலேசியாவில் மறைந்து வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மலேசிய பொலிஸ் மா அதிபர் காதீல் அபூபக்கரின் ஒத்துழைப்புடன் மலேசியாவில் உள்ள இலங்கை இராணுவப் புலனாய்வு அதிகாரியொருவர், குறித்த இலங்கையர்களை கண்காணித்து வருகின்றார் எனக் குறிப்பிடப்படுகிறது.

இதுவரையில் மலேசியாவில் பதுங்கியிருந்த எட்டு பேரை கைது செய்து நாடு கடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் இருவர் தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்கள் என அந்த சிங்களப் பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் குறித்த இராணுவப் புலானய்வு அதிகாரிக்கு மலேசிய தூதரத்தின் உயரதிகாரியொருவர் இடையூறு செய்து வருவதாக இதற்கு முன்னர் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. தகவல்கள் இப்படி வந்தாலும், நடவடிக்கை என்பது அரசியல் நலன்களை மையபப்டுத்தியே தீர்மானிக்கபப்டும்.

    ReplyDelete

Powered by Blogger.