Header Ads



சவுதி அரேபியாவில் 2 இலங்கை பெண்கள் மரணம்

சவுதி அரேபியாவின் அஸீர் பிரதேசத்தில் இலங்கை பணிப்பெண்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி தெரிவித்துள்ளது. இவ்விருவரில் ஒருவர் விபத்திலும், மற்றவர் எரியூட்டப்பட்ட நிலையிலும் மரணமடைந்துள்ளனர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் திருகோணமலை உப்புவெளியை வசிப்பிடமாகக் கொண்ட  நசுரா என்பவராவார். அவர் ஐந்து பிள்ளைகளின் தாயாருமாவார். இன்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே பணிப்பெண்ணாக அவர் சவுதிக்கு சென்றுள்ளார்.

தான், பணிப்பெண்ணாக இருந்த எஜமானின் வீட்டு எஜமானி தன்னை தாக்கியதுடன், பல்வேறான துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தினார் என்றும், சில நாட்களுக்கு முன்னர் பெற்றோல் அல்லது வேறு ஏதாவது எரிபொருளை ஊற்றி, அறைக்குள் போட்டு பூட்டி எரியூட்டினார் என்று அஸீர் வைத்தியசாலையின் ஊழியரிடம் அந்த பணிப்பெண் தெரிவித்துள்ளார்.

அஸீர் வைத்தியாசாலைக்கு வெளியே உயிருக்காக துடித்துக் கொண்டிருந்த அப்பெண்ணை, வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாக அந்நாட்டில் இருக்கின்ற இலங்கை சமூக சேவையாளரான நிமல் எடேரமுல்ல தெரிவித்துள்ளார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸீர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்த போதே வைத்தியசாலை ஊழியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அந்த பெண், சிகிச்சை பலனளிக்காத நிலையில், கடந்த 25ம் திகதி புதன்கிழமை மரணமடைந்துள்ளார். அவருடைய சடலம் அஸீர் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த பெண் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அராபிய மொழியில் எழுதப்பட்ட ஆவணமொன்றில் அவருடைய பெருவிரல் அடையாளம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதற்கிடையில் அபா பிரதேசத்திலிருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கின்ற அரப் மலை பிரதேசத்தில் பணியாற்றிய மற்றொரு இலங்கை பணிப்பெண், எஜமானின் வீட்டிலிருந்து தப்பியோடிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்று ஜேடா கவுன்சிலர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

அவர், இலங்கை பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் அந்த காரியாலயம் தெரிவித்துள்ளது.

அப்பெண்ணின் சடலம், ஜிகாத் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. தேசியக் கொடியில் கலிமாவை எழுதி, கொலைகார வாளைப் போட்டு இருக்கும் சவூதி அரேபிய காட்டுமிராண்டிகள் தமது மனம் வறண்ட பாலைவனப் புத்தியை அடிக்கடி காட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்.

    தலைப்பு : இரண்டு இலங்கைப் பெண்கள் சவூதி காட்டுமிராண்டிகளால் ஈவிரக்கமின்றி கொலை செய்யபப்ட்டுள்ளனர் என்று இருந்தால் தான் சுள்ளேன்று உறைக்கும்.

    இஸ்லாத்தில் பணக்காரன், ஏழை என்கின்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று சொன்னாலும், சவூதி பணக்கார நாடாக இருப்பதால் தான் இலங்கை போன்ற நாட்டுப் ஏழைப் பெண்களால் நீதியை பெற முடிவதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.