Header Ads



தபால் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட 1500 மில்லியன் ரூபாய் பணத்தை காணவில்லை - அமைச்சர் ஹலிம்

தபால் திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கடந்த அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 1500 மில்லியன் ரூபாய் பணத்திற்கு இதுவரை என்ன நடந்ததென்று தெரியவில்லை என தபால் சேவை மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலிம் தெரிவித்துள்ளார்.

நேற்று வானொலி சேவை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தினால் தபால் திணைக்கள அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 1500 மில்லியன் ரூபா பணம் எந்த அபிவிருத்திக்கு பயன்படுத்தியதென இதுவரை தகவல் வெளியாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால் திணைக்களத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டத்திற்காக 2015ம் ஆண்டிற்காக 75 மில்லியன் ரூபாவும், 2016ம் ஆண்டிற்காக 750 மில்லியன் ரூபாய் பணமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பணத்திற்கு என்ன நடந்ததென ஆராய்வதற்காக எதிர்வரும் காலங்களில் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.