Header Ads



மைத்திரிபால சிறிசேனவை இறுதியில் ஆதரித்து, வெல்லவைத்த பெருமை எமக்கே உரியது -

-சுஐப் எம். காசிம்-

கேள்வி: அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் வடக்குக் கிழக்கின் சுகாதார அபிவிருத்தி பற்றிய உங்களது திட்டங்கள் பற்றிக் கூற முடியுமா?

பதில்: சுகாதாரப் பகுதி அதிகாரிகளுடன் வடக்குக் கிழக்கில் உள்ள வைத்தியசாலைகளுக்கு செல்லும் திட்டத்தை தொடங்கியுள்ளேன். ஆங்கா ங்கே காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யவும் தேவைகளை நிறைவேற்றவும் 100 நாள் வேலைத் திட்டத்தைப் பயன்படுத்த இருக்கிறோம்.

கேள்வி: கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பில் உருவாகிய பிரச்சினைகளைச் சமாளிக்க உங்கள் கட்சியால் முடிந்ததா?

பதில்: ஆம். முதலமைச்சர் நியமனம் தொடர்பாக எழுந்த கருத்து வேற்றுமைகள் களையப்பட்டு சுமுகமான தீர்வு எட்டியுள்ளது. பெரும்பான்மையான சபை உறுப்பினர்களைக் கொண்ட கடசியே ஆட்சி அமைக்கும் என்பது சட்டபூர்வமான விதிமுறை.

குறைந்த எண்ணிக்கையான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியில் ஓ உறுப்பினர் அதிகூடிய வாக்குப் பெற்றார் என்றபதற்காக அவர் முதலமைச்சராக வரவாய்ப்பில்லை. சபைக்குத் தெரிவான அதிகூடிய உறுப்பினர்களைக் கொண்ட கட்சி நாம் என்பதால் பிரச்சினை தீர்ந்துள்ளது. எமது கட்சி முதலமைச்சரை நியமித்துள்ளது.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.வும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆரம்பத்திலிருந்தே பொது வேட்பாளரை ஆதரித்து வருவதாகவும் ஸ்ரீல.மு.கா. இறுதி நேரமே பொது வேட்பாளரை ஆதரித்ததாகவும் அதனால் கிழக்கில் ஆட்சி அமைக்கும் உரிமை தமக்கே தர வேண்டுமென்று கூறுவது பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்: பொதுவேட்பாளரை ஆரம்பத்தில் ஆதரித்த கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமென்று கோருவது நியாயமற்றது. மாகாண சபைத் தேர்தலிலே எந்தக் கட்சி அதிக உறுப்பினர்களைப் பெறுகிறதோ அந்தக் கட்சியே ஆட்சி நிர்வாகத்தை ஏற்பதுதான் வழமையான நடைமுறை. ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை முதலில் ஆதரித்தாலும் கடைசியில் ஆதரித்தாலும் ஆதரிப்புக்கும் சபை உறுப்பினர் தொகைக்கும் சம்பந்தமில்லை. ஸ்ரீல.மு.கா. கிழக்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களைப் பெற்றதால் ஆட்சியமைத்துள்ளது பொது வேட்பாளரை இறுதியில் ஆதரித்து வெல்ல வைத்த பெருமை எமக்கே உரியது.

கேள்வி: அடுத்த ஆட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீல.மு.கா. தனித்து தன் சின்னத்தில் போட்டியிடுமா அல்லது ஐ.தே.க.வுடன் கூட்டுச் சேருமா என்பது பற்றிக் கூறுவீர்களா?

பதில்: இந்த விஷயம் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

கேள்வி: கிழக்கிலே இன நல்லுறவைக் கட்டியெழுப்ப எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிaர்கள்?

பதில்: கிழக்கிலே தற்போது ஒரு தேசிய அரசாங்கத்தை நாம் உருவாக்கியுள்ளோம். பல கட்சிகளும் இனங்களும் நிர்வாகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதால் இனங்களிடையே நல்லெண்ணம், புரிந்துணர்வை வளர்க்க இந்த நடைமுறை பெரிதும் உதவும். எல்லா இனங்களும் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ எங்களது புதிய அரசியல் நடைமுறை ஆதாரமாக விளங்கும்.

ஸ்ரீல.மு.கா. பற்றி ஆதாரமற்ற விமர்சனங்கள் இருந்த போதெல்லாம் நாம் அமைதி காத்தோம். தேசிய அரசே எமது நீண்ட கால நோக்கம். அதை வெற்றிகரமாக இன்று எட்டியுள்ளோம்.

கேள்வி: அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகம் 2013 செப்டம்பரில் திறக்கப்பட்ட பின் பூரண செயற்பாடின்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. 100 நாள் வேலைத் திட்டத்தில் அதற்கு ஏதாவது செய்ய உள்Zர்களா?

பதில்: துறைமுகத்துக்குப் பொறுப்பான அமைச்சர் அண்மையிலே ஒலுவில் துறைமுகத்துக்கு விஜயம் செய்தார். மக்கள், அமைச்சரைச் சந்தித்துத் தமது குறைபாடுகளை எடுத்துக் கூறினர். மக்கள் தெரிவித்த குறைபாடுகள் அனைத்தையும் மிக விரைவில் நிவர்த்தி செய்வதாகவும் ஒலுவில் துறைமுகத்தை நல்லபடி இயங்க வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். மேலும் எமது பிரதேசப் பொருள் விருத்திக்கும் மக்கள் தொழில் நலனுக்கும் துறைமுகம் சிறப்பாக இயங்க வேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். நல்லது நடக்கும் என்று நம்பலாம்.

கேள்வி: 13வது அரசியல் திருத்தத்தைப் பூரணமாக நடைமுறைப்படுத்தி வடக்குக் கிழக்கு மாகாண சபை அதிகாரங்களை அதிகரிக்கும் திட்டம் 100 நாள் வேலைத் திட்டத்தினுள் அடங்குகிறதா?

பதில்: ஆம். 100 நாள் வேலைத் திட்டத்தில் இந்த அம்சம் வருகிறது. வடக்கு கிழக்கு மட்டுமின்றி எல்லா மாகாண சபைகளுக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும். பொதுவானதாக அமையும். இதுவே எங்கள் நிலைப்பாடு.

கேள்வி: வடக்கு கிழக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பில் மு.கா.வின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

பதில்: வடக்குக் கிழக்கு இணைப்புக்கு நிபந்தனையுடனான ஆதரவளித்த தன்நோக்கம் முஸ்லிம் சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டதாகும். எங்களுடைய முன் நிபந்தனை வடக்கும் கிழக்கும் இணையும் பொழுது இவ்வாறான இணைப்பின் கீழ் முஸ்லிம் சமூகத்துக்கு தென் கிழக்கு அலகு அமைய வேண்டும் அந்த நிபந்தனை ஏற்கப்படாவிடின் இணைப்பு சாத்தியமில்லை என்பதே எமது நிலைப்பாடு.

கேள்வி: முன்னைய அரசின் நகர அபிவிருத்தித் திட்டத்தின் செயற்பாடுகளால் கொழும்பில் கொம்பனித்தெரு மக்கள் குறிப்பாக அநேகமான முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீல.மு.கா. இந்த மக்களின் நலன் கருதி நஷ்டஈடாக வழங்கவும் வீடு, தொழில் இடங்கள் கிடைக்கவும் அரசின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுமா?

பதில்: எங்கள் கட்சித் தலைவர் தற்போது நகர அபிவிருத்தி, நீர் விநியோகத்துக்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார். அமைச்சரும் அவருடன் இணைந்த குழுவினரும் பாதிக்கப்பட்டவர்களின் விவரம், பாதிப்பின் தன்மை போன்றவற்றைத் திரட்டி வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளை அறிந்து நிவாரணமோ நஷ்டஈடோ வழங்க உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிய முடிகிறது.

கேள்வி: 19வது அரசியலமைப்புத் திருத்தம் பற்றி ஸ்ரீல.மு.கா. யின் நிலைப்பாடு என்ன?

பதில்: 19வது திருத்தத்தை நாம் முழுமையாக ஆதரிப்போம். எனினும் 18வது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் கட்சிக்குள்ளே எதிர்ப்புகளை வெளியிட்டோம். எனினும் நாங்கள் பாரிய அழுத்தங்களைச் சந்திக்க வேண்டி நேரிட்டதால் ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தற்போது 19வது திருத்தத்தை ஆதரவளிப்பதில் நல்ல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே, அதற்கு ஆதரவிளப்போம்.

கேள்வி: கிழக்கில் முஸ்லிம்களின் நிலங்கள் பறிபோனது தொடர்பாகப் பிரச்சினைகள் உள்ளன. 100 நாள் வேலைத் திட்டத்தில் அப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமா?

பதில்: இந்த நிலப்பிரச்சினை தொடர்பான ஆவணக் கோவைகள் நிறைய என் மேசையில் உள்ளன. அவற்றைப் பரிசீலனை செய்து பிரதமருக்கு ஓர் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறேன்.

அறிக்கை சமர்ப்பித்த பின் இது தொடர்பான பேச்சு வார்த்தையும் வேண்டிய செயற்பாடும் இடம்பெறலாம். 100 நாள் வேலைத் திட்டத்தில் சேர்க்கவே முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த விஷயத்தை சிறப்பாகக் கையாள அரசு ஒரு செயலணிக் குழுவை நியமிக்க வேண்டுமென அரசைக் கோருகிறோம். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்க வழிபிறக்கும். 50,000 ஏக்கர் வயல் காணிகள் இந்தப் பாதிப்புக்குட்பட்டவை. இவை தமிழில் கண்டங்கள் எனப்படும் அனைத்தும் முஸ்லிம்களுக்குரியவை.

கேள்வி: வட மாகாண சபையின் இனப்படுகொலைப் பிரேரணை தொடர்பாக ஸ்ரீல.மு.கா.வின் நிலைப்பாடு என்ன?

பதில்: இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டதாகக் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளை 6 மாதம் பின் போட ஸினிசிவிஞி இணைங்கியுள்ளது. கூட்ட மைப்பின் ஒரு பிரிவினர் அதை மறுத்துரைக்கின்றனர். வேறு ஒரு பிரிவினர் பிற்போடப்பட்டது நல்லது என வரவேற்கின்றனர். பின்போட்டமை தமிழருக்கு நன்மையானது என்கின்றனர். இந்த விஷயத்தில் அவர்களுக்குள் கருத்து முரண்பாடும் பிரிவினையும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இனப்படுகொலை தமிழரை மட்டும் பாதிக்கவில்ல. 30 ஆண்டுகாலக் கெடுபிடியில் முஸ்லிம்களும் சிங்களவரும் கூடக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அப்பாவிகளான சாதாரண பிரசைகள் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவைகளும் இனப்படு கொலைகள் என்பதால் இனப்படுகொலை தமிழரை மட்டுமல்ல சிங்களவர் முஸ்லிம்களையும் அழித்தொழித்தது. பள்ளியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் இரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். சில முஸ்லிம் கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் காரணமின்றி கொலை செய்யப்பட்டனர்.

இவ்வினப் படுகொலை பற்றிய விஷயம் ஓர் இனத்தை மட்டும் குறிப்பிடாது ஒரு பாரபட்சமற்ற நிலைப்பாட்டில் மூவினப் படுகொலைகளையும் சுட்டுவதாக அமைய வேண்டும். இனப்படுகொலை தொடர்பான எந்த விசாரணையும் கொலை செய்யப்பட்ட எல்லா இனத்தவருக்கும் உரியதாக அமைய வேண்டும்.

8 comments:

  1. Dont proud your self.muslus decided to vote gormy3.your party has gone drain if not support for my3.hasn ali sir do your goid job for our soceity.dint unnessasy comments

    ReplyDelete
  2. Dear mr. Hasan Ali, Were u sleeping all these times. Muslims of all parts of the Island had decided well in advance before you people (SLMC) come to a decision to support MY3 . It is wise to be tightlipped rather than uttering words on the victory of MY 3 .

    ReplyDelete
  3. This is a joke,

    we people decided to support My3, SLMC feared and pushed to accept people decision, Mr. Alt please study what is politics.

    ReplyDelete
  4. Hello Mr, we have already decided to send Mahinda and done alhamthulillah, close your bloody mouth plZ

    ReplyDelete
  5. எப்புடித்த்தான் இப்டியெல்லாம் பேச உங்களுக்கு வாய் வரதோ தெரியல?? அல்லாஹ்வப் பயந்துகங்க முஸ்லிம் சமூகத்துட விடயத்தில…

    ReplyDelete
  6. Don't u feel shame to raise up u r voice now that , u & SLMC did so and so wait see what is going to happen in fourth comming general election/ u all are our servant because of we cast our vote shhhh and do the necessary services to the people really needed now

    ReplyDelete
  7. Kaavi udaianintha invathuhal pallihalai udikintarhal minister Hasan ali avarhal perumaipesuhintarhal

    ReplyDelete
  8. அடடா...! இந்த ஆண்டின் மிகப்பெரும் நகைச்சுவையை காலாண்டு முடிவதற்கிடையில் கூறிவிட்டாரே..

    முஸ்லீம் காங்கிரஸிலும் ஒரு மேர்வின் சில்வா இருப்பது எங்களுக்கு இப்போதுதானே தெரியவருகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.