Header Ads



பாடசாலை அதிபரின் தூர்வார்த்தைகளினால், மயங்கி வீழ்ந்த ஆசிரியை - யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ். மாவட்டத்தில் உள்ள தீவக கல்வி வலயத்தில் காரைநகர் பிரதேசத்தில் உள்ள பிரபல பாட சாலை ஒன்றின் அதிபர் கடமைக்குச் சென்ற பாலூட்டும் தாயான ஆசிரியர் துர்வார்த்தைகளால் பேசியதால் மயக்கமடைந்த ஆசிரியை யாழ். போதனா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

 தனது மகப்பேற்று விடுமுறையை முடித்துக் கொண்டு பாடசாலைக் கடமைக்காக சென்ற குறித்த ஆசிரியை கையொப்பமிடச் சென்ற போது கையொப்பப் பதிவேட்டை எடுத்து எறிந்து மிக மோசமான வார்த்தை களை அதிபர் பிரயோகித்த வேளை ஆசிரியை மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தபோது சக ஆசிரியர்களால் காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சுவாச வாயு பொருத்தப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர கிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பில் பாடசாலை ஆசிரியர்கள் பெரிதும் விசனமடைந்துள்ளதுடன் ஏனைய ஆசிரியர்களுடனும் அதிபர் இவ்வாறே நடந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

4 comments:

  1. லூசுப்பயல் போல

    ReplyDelete
  2. Hope this principal does not have family?

    ReplyDelete
  3. No some time teacher acts smarter then sir

    ReplyDelete
  4. Who gave appointment mental principal

    ReplyDelete

Powered by Blogger.