Header Ads



மாலைதீவு நஷீட் நிலமை 'மைத்திரிக்கு'

-நஜீப் பின் கபூர்-

நமது நாட்டு அரசியலில் நெடுநாள் நீடித்து நிலைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தோற்றுப் போவதற்கு மைத்திரியின் செல்வாக்குக் காரணம் என்பதனை விட மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த அதிர்ப்த்தியே காரணமாக இருந்தது.

பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிரிசேன பக்குவப்பட்ட எளிமை மிக்க மென்மையான ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும் அவர் ஒரு கவர்ச்சியான அரசியல் தலைவராக  இருக்கவில்லை. மைத்திரியை பல்லின் பல கட்சிகளைச் சேர்ந்த குழுக்களே பதவிக்கு கொண்டு வந்து அமர்த்தியது. எனவே தேர்தல் காலங்களில் மைத்திரிக்கு இருந்த ஜனரஞ்சகம் நிலையற்ற நீர்க்குமுனி போன்றது. 

வருகின்ற பொதுத் தேர்தலில் இந்தக் குழுக்கள் பல்வேறு பிரிவுகளாக தேர்ததல் களத்தில் இறங்க வாய்ப்பிருக்கின்றது. அந்த நேரத்தில் இந்தக் குழுக்கள் மைத்திரிக்கு விசுவாசமாக இருப்பதை விட சில சமயங்களில் மைத்திhயை விமர்சிக்கவும் எதிர்க்கவும் இடமிருக்கின்றது. ஏனெனில் மைத்திரியை பதவிக்கு அமர்த்திய பிரதான சக்தியான ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்த்து மைத்திரி சுதந்திரக் கட்சி சார்பிலேயே பரப்புரைகளுக்காக மேடையேற வேண்டிய தேவை இருக்கின்றது. 

ரணில் - மைத்திரி 100 நாள் நல்லாட்சிக்கு ஒத்துழைப்புத் தருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கின்ற எதிர்க் கட்சியில் உள்ளவர்களும் இன்று நல்லாட்சியை விமர்சிக்கின்ற நிலை தோன்றி இருக்கின்றது. அதே நேரம் தற்போது ஆளும் தரப்பாக இருக்கின்றவர்களும் அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கின்றார்கள். எனவே வெற்றி பெற்றவர்களும் தோற்றுப் போனவர்களும் திருப்திப்படாத ஒரு நிலையிலே இன்று இந்த நல்லாட்சி போய்க் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

அதே நேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது விசுவாசிகளும் சுதந்திரக் கட்சிக்குள் நெருக்கடியைத் தோற்றுவிக்கும்  வகையில் தொழிபட்டு வருகின்றார்கள். தோற்றுப்போன மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியல் அதிகாரத்தில் கொண்டு வந்து நிறுத்துவதற்று அவருக்கு விசுவாசமானவர்களும், ராஜபக்ஷவின் தோல்வியால் தமது அரசியல் எதிர்காலம் சுன்னயமாகி விடும் என்று எதிர்பாக்கின்றவர்களும் இந்த முயற்ச்சியில் தீவிரமாக இறங்கி செயலாற்றி வருகின்றார்கள்.

மைத்திரியின் வெற்றிக்குப் பின் இலங்கை அரசியில் மிகப் பெரிய நிகழ்வாக நுகேகொட கூட்டத்தைக் குறிப்பிட வேண்டும் - பார்க்க வேண்டும் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் நாம் கடந்த வாரம் குறிப்பிட்டது போன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் கையாட்கள் மட்டுமல்லாது ராஜபக்ஷ ஆட்சியில் பெரும் இலாபமீட்டிய இந்த நாட்டில் முக்கிய  வர்த்தகப் புள்ளிகளும் இருந்திருக்கின்றார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து மஹிந்தவை மீண்டும் ஒரு ஹீரோவாக்க முயன்று வருகின்றார்கள். நுகேகொட கூட்டத்தின் பின் அவர்களுக்கு இது விடயத்தில் தற்போது நல்ல நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கின்றது.

நாம் பார்த்த கணிப்பின்படி ராஜபக்ஷ ஆட்சியில் நடந்த சரி பிழைகள் எதுவாக இருந்தாலும் ராஜபக்ஷவுக்கு இன்னும் சிங்கள கிராமப்புற மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்து வருகின்றது என்பது தான் யதார்த்தம். சுதந்திரக் கட்சி ஆதரவாலர்கள் மத்தியில் மைத்தியை விட மஹிந்த ராஜபக்ஷவுக்கே அதிக செல்வாக்கு. 

கடந்த ஜனாதிபதித் தேர்தல், சுதந்திரக் கட்சியின் தலைவருக்கும் செயலாளருக்குமிடையே நடைபெற்ற போராக இருந்தாலும் சுதந்திரக் கட்சி வாக்காளர்கள் கடந்த தேர்தலில் 90 வீதத்திற்கும் மேல் ராஜபக்ஷவுக்கும் 10 சத வீதத்திற்கும் குறைவானவர்கள் மைத்திரிக்கும் வாக்களித்திருந்தனர். இதற்குப் பல நியாயங்கள் இருந்தாலும் அன்று சுதந்திரக் கட்சி ஆதரவாலர்கள் நிலைப்பாடு அப்படித்தான் இருந்தது.

கடந்த ஜனாதிபத் தேர்தலில் சுதந்திரக் கட்சியினர் தாம் தோற்றுப்போன உணர்விலேயே தற்போது இருக்கின்றனர். மைத்திரி சுதந்திரக் கட்சியின் ஆதிக்த்தைத் தற்போது கைப்பற்றினாலும் அதற்குச் சவால் விடுக்கக்கூடிய வல்லமை மஹிந்தவுக்கு இருக்கின்றது. இதனையே தற்போது நாட்டில் நடந்து வரும் அரசியல் செயல்பாடுகளில் பார்க்க முடிகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவர்களுடைய குடும்பம் மற்றும் கையாட்களுக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் மோசடி சட்ட விரேத செயல்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்க்களை சுதந்திரக் கட்சி ஆதரவாலர்கள் பெரிதாக எடுத்தக் கொண்டிருப்தாகத் தெரியவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ ராஜபக்ஷவுக்கு எதிராக தனது செயல்பாடுகளை ஆரம்பிக்க  ஏறக்குறைய 10 வருடங்கள் காத்திருந்தாலும் மஹிந்த உடனடியாகவே மைத்திரிக்கு எதிரான செயல்பாடுகளை ஆரம்பித்து விட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவின் காலம் முடிந்து விட்டது அவருக்கு இன்னும் அரசியல் ரீதியில் முக்கியத்துவத் கொடுக்க வேண்டியதில்லை. ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராகக் கொண்டு வரத் தேவையில்லை என்று எதிர்பாக்கின்ற - கருதுகின்ற  பல தலைவர்கள் சுதந்திரக் கட்சியில் இருந்தாலும் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ அளவுக்குப் பிரபல்யமான தலைவர்கள் எவரும் இல்லை என்பது பொதுவாக அபிப்பிராயம். 

சுதந்திரக் கட்சி வருகின்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க ராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக்கினாலே முடியும் என்று கருதுபவர்களின் பலம் கட்சியில் மேலோங்கி வருகின்றதோ என்று தற்போது சிந்திக்க வேண்டி இருக்கின்றது. உதாரணத்துக்குக் குறிப்பிடுவதானால் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்ஹ ராஜபக்ஷவை சுதந்திரக் கடச்சி பிரதமர் வேட்பாளராக கொண்டுவர வேண்டும் என்று பகிரங்கமாகப் பேசி வருகின்றார். அதே போன்று குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி இருக்கின்ற பெரும் எண்ணிக்கையான சுதந்திராக் கட்சி பாராளு மன்ற உறுப்பினர்கள் மீண்டும் ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்தால் நாம் தப்பிப் பிழைக்கலாம் என்றும் ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.

முன்னாள் பிரதமர் ரத்ணசிரியின் மகன் விதுர விக்கிரம நாயக்க  மைத்திரியில் செய்படுகளைத் தற்போது பகிரங்கமாக  விமர்சிக்கத் துவங்கி இருக்கின்றார் எதிர் வரும் நாட்களில் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இன்னும் பலர் பகிரங்கமாக குரல் கொடுக்கவும் கள மிறங்கவும் இருக்கின்றார்கள் என்ற தகவல் எமக்குக் கிடைத்திருக்கின்றது. எப்படியோ ராஜபக்ஷ மீண்டும் அரசியல் அதிகாரத்துக்கு வந்தால் மைத்திரி, ராஜித போன்றவர்களுக்கு மலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீடுக்கு ஏற்பட்ட நிலை ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பளராக ராஜபக்ஷதான் வரவேண்டும் என்று கருத்து நாளுக்கு நாள் வலுவடைவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. தற்போதய எதிர்க் கட்சித் தலைவராக பாராளுமன்றத்தில் செயலாற்றுகின்ற நிமல் சிரிபால சில்வா முன்கூட்டி பிரதமர் யார் என்ற அறிவிக்கின்ற வழக்கம் கட்சியில் இல்லை வெற்றி பெற்றதன் பின்னர் ஜனாதிபதிதான் பிரதமரை நியமனம் செய்வார் இதுதான் வழக்கம் யாப்பும் அதனைத்தான் குற்றிப்படுகின்றது என்று அவர் குறிப்பிடுவதற்கும் ஒரு காரணம் இருக்கின்றது. அவர் வருகின்ற தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பிரதமர் பதவியை எதிர்பார்க்கும் முக்கிய அரசியல் புள்ளியாக இருக்கின்றார் என்பதனை இங்கு குறிப்பிட வேண்டி இருக்கின்றது. ஆனால் சாhரா சரி சுதந்திரக் கட்சிக்காரர்களின் விருப்பு மஹிந்தவுக்குச் சாதகமாகவே இருந்து வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பெறுத்த வரை சுதந்திரக் கட்சிக்குள் நிகழ்கின்ற இந்த பனிப்போர் ஆரோக்கியமாகப் பார்க்கப்பட்டாலும் அவர்கள் எதிர்பார்பது போல் முடிவுகள் அமைவதற்கு வாய்ப்பக்கள் மிகக் குறைவாக இருக்கின்றது என்பதனை அந்தக் கட்சிக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் ஆர்வத்துடன் செயலாற்றிக் கொண்டிருந்த சந்திரிக்க தற்போது அமைதியாக இருக்கின்றார். இதற்குத் தற்போதய அரசின் செயல்பாடுகளில் அவருக்கு நம்பிக்கை இல்லாது போய் இருக்கின்றது என்று தெரிகின்றது.

தற்போது நாட்டில் ஆட்சியில் இருக்கும் மைத்திரி நிருவாகத்தை சர்வதேசம் ஆரோக்கியமாப் பார்த்தலும், பக்கதிலுள்ள இந்திய நேசக்கரம் நீட்டினாலும் மீண்டும் ராஜபக்ஷ அரசியல் அதிகாரமுள்ள பதவிக்கு அமர்கின்ற நிலையில் எல்லாம் தவிடுபொடியான கதையாகத்தான் வரும். மேலும் போர்க் குற்றங்கள் தொடர்பான தற்போதய சர்வதேசத்தின் மென்போக்கு மஹிந்த அதிகார பதவியில் அமரும்போது  கடுமையாக வாய்ப்பிருக்கின்றது. 

ஒரு வேலை நாம் குறிப்பிடுவது போல் இனவாதிகள் அல்லது சுதந்திரக் கட்சியினர் ராஜபக்ஷவைப் பிரதமர் வேட்பாளராக்கி அதில் அவர் வெற்றி பெற்று விட்டால் நல்ல வழியிலோ அல்லது மாற்று வழியிலோ மக்களை வீதிக்கு இறக்கி மைத்திரியை ஜனாதிபதிப் பதவியிலிருந்தும் வெளியேற்றுகின்ற முயற்ச்சியிலும் இனவாதிகள் இறங்க இடமிருக்கின்றது இப்படி நிலமை மாறினால் நாட்டில் கொந்தளிப்பான அரசியல் நிலை ஏற்படும். 

No comments

Powered by Blogger.