Header Ads



யூசுப் முப்தியின் வழிகாட்டலில், ஸம்ஸம் பௌண்டேசன் உதவியில் வறிய மாணவர்களுக்கு உதவி (படங்கள்)

யூசுப் முப்தியின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட ஸம் ஸம் பௌண்டேசன் ஏற்பாட்டில் வறுமைக்கு உட்டபட்ட மாணவர்களுக்கு உதவியளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை, 28 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவ சபையின் தவிசாளரும்,   பௌத்தசாசன அமைச்சருமான கரு ஜெயசூரிய பிரதம அதீதியாக கலந்துகொண்டதுடன், மற்றும்பல பௌத்த, இஸ்லாமிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.

ஸம் ஸம் பௌண்டேசன் மேற்கொண்ட இந்த முயற்சிக்கு சுவிற்ஸர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்களும் தம்மால் இயன்ற சிறு உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை ஸம் ஸம் பௌண்டேசன் பின்தங்கிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க உதவி வருவதுடன், புனித ரமழான் மாதத்திலும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவியளிக்க விரும்புமிடத்து இதுபற்றிய விபரங்களை யூசுப் முப்தியுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

பட உதவி – விடியல்






1 comment:

  1. Wonderful role of Dawa +interfaith with wider community +social obligation etc .
    May Allah grant more & more strenth & resources to Usuf Mufthi sab with better output .
    Jzkllhr from UK

    ReplyDelete

Powered by Blogger.