Header Ads



ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும் - ரவி கருணாநாயக்க

ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஆற்றிய உரையின்  போது தெரிவித்தார். 

இலங்கையர்களுக்கு ஆகக்கூடுதலான நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பமாக இது அமையும். எமது இனத்துக்கு கௌரவமாக சேவையளிப்பதே எங்கள் பொறுப்பாகும். நல்ல எதிர்காலத்துக்காக மாற்றங்களை ஏற்படுத்துவோம். வென்றெடுத்த சுதந்திரத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கமாகும். ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும். மக்கள் சேவையை மக்கள் சேவையாகவே கொண்டு நடத்துவதற்கு நாம் முன்னிற்போம். 

சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை. ஜனாதிபதி பதவியேற்புக்கு 6,000 ரூபாய் மட்டுமே செலவு. அமைச்சரவையை 71 இலிருந்து 31ஆகக் குறைத்தோம். கடந்த வரவு – செலவும் திட்டத்தில் 1,400 பில்லியன் ரூபாய், வரி வருமானமாக எதிர்ப்பார்க்கப்பட்டது. கடந்த வரவு – செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை 521 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த தேசிய உற்பத்தியின் 4.6 சதவீதமாகும். ஹெஜின் ஒப்பந்தமே நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது. 

ஜனாதிபதியின் செலவு விவரங்கள் 

2008ஆம் ஆண்டு-634கோடி ரூபாய் 
2009ஆம் ஆண்டு- 765 கோடி ரூபாய் 
2010ஆம் ஆண்டு- 5063 கோடி ரூபாய் 
2011ஆம் ஆண்டு- 5,063 கோடி ரூபாய் 
2012ஆம் ஆண்டு- 5,936 கோடி ரூபாய் 
2013ஆம் ஆண்டு- 6,244 கோடி ரூபாய் 
2014ஆம் ஆண்டு- 10,497 கோடி ரூபாய் 
2015ஆம் ஆண்டு- 9,593 கோடி ரூபாய் 

மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போதைய ஜனாதிபதியின் செலவு 290 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே முன்னெடுப்போம். 

4 comments:

  1. Absolutely.People mus be patient.They had been tolerating all kinds of injustice by
    the MARA regime for nine years through electing and re-electing their corrupt members
    to local bodies,PCs and parliament.No need to be nervous now to punish them.Just
    be patient,the new govt is only a little more than two weeks.

    ReplyDelete
  2. The entire island awaits to see punishment
    of the wrong doers of the previuos regime!
    Will the matter be expedited?

    ReplyDelete
  3. Good works, keep moving until the big fish

    ReplyDelete
  4. This is the first time a finance professional is appointed as Minister of Finance, can some one check the professional qualification, experience and achievements of the Deputy Secretaries to the Treasury, Director General of Budget, and other Director Generals in the Ministry of Finance? then you would understand the plight of the economy and financial services growth of this country.

    ReplyDelete

Powered by Blogger.