Header Ads



மைத்திரி அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து, ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு விளக்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை இலங்கை வெளிநாட்டு விவகாரங்களுக்கான சிரேஸ்ட ஆலோசகர் ஜயந்த தனபால சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 27ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை ஜெனீவாவிற்கு விஜயம் செய்திருந்த ஜயந்த தனபால, மனித உரிமை கவுன்ஸில் குழு உறுப்பினர்களுடனும் சந்திப்பு நடத்தியுள்ளார்.

ஜயந்த தனபாலவின் இந்த விஜயம் ஒரு ஆய்வு பயணமாக அமைந்தது என்றும் புதிய ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து விளக்கமளிக்கும் விஜயமாக இது அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அமைய ஐநா மற்றும் மனித உரிமை கவுன்ஸிலுடன் இணைந்து செயற்படத் தயார் என ஜயந்த தனபால ஐநா மனித உரிமையாளர் நாயகத்திடம் எடுத்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் இணைந்து செயற்படவும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.