Header Ads



நிமல் சிறிபால சில்வாவிற்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வைத்திய நிபுணர் முறைப்பாடு

முன்னாள் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவிற்கு எதிராக விசேட சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ரணில் ஜயசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (29) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.

விசேட சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ரணில் ஜயசேன இதுபற்றித் தெரிவித்ததாவது;

நான் ராகமை வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக செயற்பட்ட காலப்பகுதியில் டீ.எஸ்.எம். இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்ய அமைச்சர் வலியுறுத்துவதாக கதிர்வீச்சுப் பிரிவின் சத்திரசிகிச்சை வைத்தியர் என்னிடம் கூறினார். ராகம வைத்தியசாலைக்கு டீ.எஸ்.எம். இயந்திரம் ஒன்று தேவை இல்லை. ஆகவே, அவசர சிகிச்சைப் பிரிவு ஒன்றை ஸ்தாபித்துத் தருமாறு அமைச்சரிடம் கேட்குமாறு நான் கூறினேன். 

இதனைக் கூறியதனால் குறித்த வைத்தியரைக் கடுமையாக அமைச்சர் சாடினார். அத்துடன், பலவந்தமாக அந்த இயந்திரத்தை வைத்தியசாலையின் சுவர்களை உடைத்து உள்ளேகொண்டு வந்தனர். இதன் போது இங்கே பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக நோயளிகளுக்குத் தேவையான மருந்துகளைக்கூட கொண்டு வருவதற்கு நிதி இல்லாமல் போனது. தரம் குறைந்த மருந்துகளையே மக்களுக்கு விநியோகிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று தெரியவில்லை. என்றார்.

2 comments:

  1. டாக்டர் ரணில் ஜயசேன கூறுவது அனைத்தும் உண்மையானால், கடந்த ஆட்சியில் நாம் அனைவரும் எத்தகையதொரு பயங்கரமான சூழலில் வாழந்திருக்கின்றோம் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது.

    ஒரு வைத்தியசாலை நிபுணர்களின் ஆலோசனைக்கு எதிராக சுவர்களை உடைத்து அவசியமற்ற இயந்திரத்தை திணித்தவர்கள் அந்த பாரிய இயந்திரத்தை கொள்வனவு செய்தது நிச்சயம் மக்களுக்கு நன்மைபுரியவதற்காக இருக்கமுடியாது. அதன்மூலம் கிடைத்த தரகுப் பணத்தை தமது பொக்கட்டுகளுக்குள் போட்டுக் கொள்வதற்காகத்தான் இருக்க வேண்டும்.

    இப்படி எத்தனையோ அவசியமற்ற இயந்திரங்களையும் பொருட்களையும் மக்களின் வரிப்பணத்தில் வாங்கி கொள்ளையடித்தவர்கள்தான் இன்று மலர ஆரம்பித்துள்ள நல்லாட்சியை எதிர்மறையாக விமர்சிக்கும் கபட முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள்.

    இத்தகையோர் தொடர்பாக பொதுமக்கள் நாம் விழிப்பாகவும் அறிவார்த்தமாகவும் செயற்படவேண்டியது அவசியம்.

    ReplyDelete
  2. இன்னும் எததநை விடயங்கள் வெளிவருமோ

    ReplyDelete

Powered by Blogger.