Header Ads



மைத்திரிக்கு மற்றுமொரு வெற்றி கிடைத்தது

சிகரட் பக்கட்களில் 80 வீதமான எச்சரிக்கை படங்களை இடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிகரட் பக்கட்களில் 80 வீதமான எச்சரிக்கை படங்களை இடுவது தொடர்பிலான சட்ட மூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய இந்த புதிய உத்தேச சட்டம் விரைவில் பாராளுமன்றில் சட்டமாக்கப்பட உள்ளது.

அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தில் இந்த விடயம் முக்கியமான இடத்தை வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்கம் பக்கட்களில் 60 வீததத்தை விட எச்சரிக்கை படங்கள் இருக்கக் கூடாது என வலியுறுத்தி வந்ததாக அப்போதைய எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்தன.

மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக மைத்திரிபால கடமையாற்றிய போது, அவர் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார். இருந்தபோதும் பல்தேசிய கம்பனிகளின் எதிர்ப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவின்மையால் சிகரட் பக்கட்களில் 80 வீதமான எச்சரிக்கை படங்களை இடும் முறைமை வெற்றியளிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது  குறித்த விவகாரத்திற்கு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.