Header Ads



மஹிந்த ராஜபக்ஸவுக்கு மன்னிப்பு கொடுங்கள் - சந்திரிக்காவிடம் கோரிக்கை


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செய்த சகல இடர்பாடுகளையும் மன்னித்து அவருடன் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றி பெறச் செய்ய முன்னுக்கு வருமாறு அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்கள் நேற்றும், நேற்று முன்தினமும் சந்திரிக்காவை சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதன் போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த, நாட்டுக்கும், கட்சிக்கும், தனக்கும் எதிராக கடந்த 9 வருடங்களாக செய்த கொடுமைகளை தெளிவுப்படுத்தியுள்ள சந்திரிக்கா, சுதந்திரக் கட்சியினரின் கோரிக்கை தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாட இணக்கம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கட்சியின் தவிசாளராகவும் செயற்படும் வகையில் கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 comments:

  1. அதுசரி,

    ஏனென்றால் இவர் செய்த தவறுகள் எல்லாம் சிறியவைதானே.. நாட்டையே மொட்டையடித்த பெரியவரை வைத்து பிழைத்த கொள்ளைக்காரர்கள்தான் தற்போது தமது கொள்ளையர் தலைவரை மன்னிக்கச் சொல்கின்றார்கள்.

    இவர்கள் திருட்டு வழியில் சம்பாதித்து தேவையான இடங்களிற்கெல்லாம் பணத்தை இலஞ்சமாகக் கொடுத்து சகல அநியாயங்களையெல்லாம் செய்தவர்கள். அதே பழக்கத்தில் இப்போது சந்திரிக்கா அம்மையாருக்கு எதை இலஞ்சமாகக் கொடுத்தால் காரியம் ஆகும் என்று றூம் போட்டு யோசித்து பார்த்து பணம் கொடுத்து மடக்க முடியாது என்பதால் 'கட்சி விசுவாசம்' எனும் இலஞ்சத்தை கொடுத்துப் பார்க்கின்றார்கள் போலும்.

    ஆனால் மேடம் படு ஸ்மார்ட்!

    ReplyDelete
  2. This is an attempt to keep
    MR away from bieng punished.

    ReplyDelete
  3. FInal attempt to escap from corruption

    ReplyDelete

Powered by Blogger.