Header Ads



ஒருநாள் போட்டியில், அதிக ஓட்டங்களை குவித்த இலங்கையர்


இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் நிதானமான ஆட்டம் காரணமாக இலங்கை அணி வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றது.

குமார் சங்கக்காரா ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களையும், திலகரட்ன டில்சான் 83 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களில் 287ஓட்டங்களுக்கு 6விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்திருந்ததுடன்  நியூசிலாந்துக்கு 288 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து முதலே தடுமாறி விக்கெட்டுக்களை பறிகொடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 253ஓட்டங்களை மாத்திரம் பெற்று 35ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

மேலும் இந்தப் போட்டியில் குமார் சங்கக்காரா மற்றுமொரு சாதனையை பதிவு செய்தார்.

ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த இலங்கையர் என்ற பெருமையை இன்று பதிவு செய்தார். 396 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சங்கக்கார 13580 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதேவேளை முன்னதாக இந்த சாதனையை சனத் ஜெயசூரியா தக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. கடந்த அரசின் அராஜக ஆட்சி விளையாட்டுத்துறையையும் விட்டுவைக்கவில்லை.

    முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் அவரது பரிவாரங்களும் தன்னை எவ்வாறெல்லாம் அவமானப்படுத்தினர் என்பதை அண்மையில் சங்கக்கார ஒரு பத்திரிகைப் பேட்டி ஒன்றில் விவரமாக குறிப்பிட்டிருந்தார்.

    அண்மைக்காலமாக சிறப்பாக ஓட்டங்களைக் குவித்து வருகின்றபோதிலும் இத்தகையோரின் அழுத்தங்களினால்தான் உலகக்கிண்ணப் போட்டிகளின் பின்பு சங்கா ஓய்வுபெறுவது எனும் முடிவை துரிதமாக எடுத்திருப்பாரோ என்ற சந்தேகம் உண்டாகின்றது.

    அவ்வாறாயின் இடம்பெற்றிருக்கும் ஆட்சிமாற்றத்தினை அனுசரித்து உலகக்கிண்ண சுற்றுப்போட்டிகளின் பின்பு ஓய்வுபெறும் தனது முடிவை சங்கக்கார மீள்பரிசீலனை செய்வது நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.