Header Ads



ஐரோப்பாவில் பரவும் இஸ்லாமிய மயமாக்கும் முயற்சிகளுக்கு கண்டனம் - சுவிஸ் சட்ட அமைச்சர்

சுவிஸ் அரசு அகதிகளுக்கு ஆதரவு அளிப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பொதுவான கொள்கையை ஏற்படுத்தினால், அதனுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

சுவிஸ் சட்ட அமைச்சர் Simonetta Sommaruga செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தற்போது உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகள் பலவீனமாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளது.

90 சதவிகித அகதிகளின் விண்ணப்பங்கள் சுவிட்சர்லாந்து உள்பட 10 நாடுகளில் பதியபடுகிறது, ஏனைய 10 சதவிகித விண்ணப்பங்களை மட்டும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த மற்ற 22 உறுப்பின நாடுகளில் பதியப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

சிரியா அகதிகளுக்கு சுவிஸ் ஆதரவு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க மறுத்த அவர், உள்நாட்டு போர் தொடங்கியதிலிருந்து சுவிஸ் அரசு சுமார் 10,000 சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துள்ளதாகவும், அவர்களுக்கு விசா வழங்குவதையும் எளிமையாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸ் அரசு சிரியா அகதிகளுக்கு அளிக்கும் உதவிகள் பெரிய அளவில் இல்லை என்றாலும், அவைகள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்த்தாக அரசு பார்ப்பதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் சிரியா உள்ளிட்ட பிற நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு சுமார் 128 மில்லியன் பிராங்குகளை சுவிஸ் அரசு செலவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இந்த தொகையை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் பரவும் இஸ்லாமியமயமாக்கும் முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவித்த அவர், கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து சிரியா மற்றும் ஈராக் நாடுகளிலிருந்து 18 தீவிரவாதிகள் சுவிட்சர்லாந்து திரும்பியுள்ளதாகவும், அவர்களில் 3 பேரை அரசு கைது செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.