Header Ads



தரை இறங்க போராடிய, எமிரேட்ஸ் விமானம்

மான்செஸ்டர் கவுன்டியில் கடும் பனிப்பொழிவு மற்றும் கடும் காற்று வீசி வருகிறது. இந்த மோசமான வானிலை நிலவுவதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏ380 விமானம், நேற்று மதியம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் மணிக்கு 97 கி.மீ. வேகத்தில் வீசும் சூறாவளிக்காற்றை சமாளித்து தரை இறங்குவதற்காக போராடியது.

இந்த போராட்டத்தின் புகைப்படம் மற்றும் வீடியோவைப் பார்க்கும் போது விமானம் வெடித்து விடுமோ என்ற பதட்டத்தை உருவாக்கும் அளவிற்கு காற்றின் வேகத்தில் விமானம் நிலை குலைந்து தடுமாறுகிறது. விமானி எவ்வளவோ போராடியும் விமானம் தன் சமநிலையை அடைய முடியாமல் தவித்தது. இறுதியில் விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் தரை இறக்கப்பட்டது.

பனிப்பொழிவு காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகளில் உள்ள விமான நிலையத்தில் இதேபோன்று கடும் வேகத்தில் பனிக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மக்கள் பயணம் செய்ய முடியாமலும் பல்வேறு உடல் உபாதைகளாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான நகரங்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.