Header Ads



சுவிட்சர்லாந்தில் புதிதாக பள்ளிவாசல்கள் கட்டவும், முகத்தை மறைக்கவும் கூடாது - வலதுசாரிகள்


சுவிட்சர்லாந்தில் உள்ள வலதுசாரியினர், பொது இடங்களில் மக்கள் முகத்தை மறைத்து உடையணிய தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுவிஸில் புதிதாக மசூதிகள் எதுவும் கட்ட அனுமதிக்க கூடாது என்று முன்பு கோரிக்கை விடுத்த அதே வலதுசாரிக் குழுவினர் தான் தற்போது முகத்தை மறைக்க தடை செய்யவேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள Ergerkingen என்ற குழுவினர், செவ்வாய்க் கிழமை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த சில நாட்களுக்குள் மத்திய அதிகாரிகளிடம் இது தொடர்பான உரையை கோப்பாக சமர்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இஸ்லாமியர்கள் அணியும் உடலை முழுவதுமாக மறைக்கும் புர்கா திரைகளையும், முகத்தை மட்டும் மறைக்கும் நிகாப் திரைகளையும் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் அறிக்கையில் குறிப்பிடவில்லை.

பொது இடங்களில் எந்தவிதமான உடையின் மூலமும் பொதுமக்கள் அனைவரும் முகத்தினை மறைக்க கூடாதென்று குறிப்பிட்டுள்ளனர்

சாலைகள், சதுக்கங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் முகத்தினை மறைக்க கூடாதென்றும் வழிபாட்டு இடங்களில் இந்த கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இஸ்லாமிய அரசு பயங்கரவாதம் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், அடிப்படை பாதுகாப்பு பரிசீலனைகளை கருத்தில் கொள்ளாமல் பொது இடங்களில் தலையை மறைத்துள்ளவர்களால் பொதுமக்கள் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது என்று Ergerkingen குழு தெரிவித்துள்ளது.

1 comment:

Powered by Blogger.