Header Ads



செலிங்கோ இஸ்லாமிய வங்கியிலிட்ட பணம் குறித்து, ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம்கள் முறைப்பாடு


-அஸ்ரப் ஏ சமத்-

சிலின்கோ இஸ்லாமிக் வங்கியில்  முஸ்லீகள் 600 மில்லியன் ருபாவை முதலிட்ட அமைப்பிணர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியன் மேலதிகச் செயலாளர்  கொடிக்காரவைச் சந்தித்து தாம் மேற்படி வங்கியில் வைப்பில் இட்ட பணத்தை இந்த புதிய அரசினால் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இன்று 29-01-2015 இவ்வைப்பிலிட்டவர்கள் சங்கத்தின் அமைப்பின்  தலைவர் முஜீப் இப்றாஹீம் மற்றும் மேல்மாகண சபை உறுப்பிணர் முஜிப் ரஹ்மானும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். 

புதிதாக இரகசியப் பொலிசாருக்கு முறைப்பாட்டினை தெரிவித்து புதிய முறைப்பாடக இதனை பரீசீலனை செய்யும்படியும், பொலிஸ்மா அதிபருக்கு  ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர்  கொடிக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ் வங்கியில் முஸ்லீம்கள் 600 மில்லியன் ருபா முதலிட்டுள்ளனர். இப் பணம் இதுவரை சிலிங்கோ இஸ்லாமிய வங்கியில் மாதாந்த செலுத்தல முறையில் செலுத்துவதற்கு ஏற்பாடாயிருந்தது. 2 முறை மட்டும் 35 மில்லியன் ருபா மட்டுமே செலுத்தப்பட்டது.

இவ்வங்கி இஸ்லாமிய முறைப்படி ஹலால் வங்கியாகும் முஸ்லீம்கள் செலிங்கோ இஸ்லாமிய வங்கி முஸ்லிம் பிரதேசங்களான கொழும்பு, அக்குரனை, காத்தாண்குடி, சம்மாந்துறை, கண்டி, பல பிரதேசங்களில் 15 கிளைகள் திறக்கப்பட்டன. இவ்வங்கியில்  பணம் முதலிடும் படி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பத்திரிகை வாயிலாகவும், பள்ளிவாசல் பிரசங்கம், நோன்பு காலத்தில் பத்திரிகை வானொலி வாயிலாகவும்  விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. 

இதில் முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் அவரது மனைவியின் பெயரில் 90 மில்லியன் ருபாவை வியாபரததுக்காக பணம் பெற்றுள்ளார். ஆவர் மீள இப் பணத்தை செலுத்தவில்லை.  இவ் வங்கியின் தலைவராக டொக்டர் ரபீக் செயல்பட்டார். அத்துடன் ஜெயதிஸ்ச பணிப்பாளராகவும் செயல் பட்டார்.
இந் நிதியில் இருந்து 50மில்லியன் ருபாவை ஹம்பாந்தோட்ட அபிவிருத்தி வங்கி மோட்கேஜ் கடனைப் பெற்று சசக்ஸ் கொலிஜை ஆரம்பித்துள்ளது. 

இதில் முதலிட்டவர்கள். ஆசிரியர் ஆசிரியைகள், தமது மகளுக்காக திருமணம், காணி சொத்துக்களை விற்று ஹலாலான முறையில் முதலிட்டவர்கள். தமது பிள்ளைகள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பிய பணத்தினை ஹலாலால் முறையில் இவ் வங்கியில் முதலிட்டதாக தெரிவிக்கின்றனர்.  

No comments

Powered by Blogger.