Header Ads



"நாம் இதற்கு பதிலடி கொடுப்போம்'' - இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரான் இராணுவ ஜனரல் ஒருவர் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஈரான் அரசு அமெரிக்கா ஊடாக இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக அந்நாட்டு அரச ஊடகமான இர்னா குறிப்பிட்டுள்ளது.

"சியோனிச அரசு தனது செயலுக்கான விளைவுக்கு காத்திருக்க வேண்டி இருக்கும் என்று நாம் அமெரிக்காவிடம் குறிப்பிட் டிருக்கிறோம்" என்று ஈரான் துணை வெளி யுறவு அமைச்சர் ஹ{ஸைன் அமிரப்துல் லாஹியான் இர்னாவுக்கு குறிப்பிட்டுள்ளார். "அவர்கள் சிவப்பு கோட்டை தாண்டிவிட்டார்கள்" என்று கூறினார்.

இஸ்ரேலுக்கு கையளிப்பதற்காக அமெரிக்காவுடனான இராஜங்க வலையமைப்பின் ஊடே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமிரப்துல்லாஹியான் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய சிரிய கட்டுப்பாட்டு கோலன் குன்று பகுதியில் கடந்த ஜனவரி 18 ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் இராணுவ ஜனரல் முஹமது அலி அல்லஹதி உட்பட மேலும் ஆறு ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட ஜனரலின் நினைவு நிகழ்வொன்றில் உரையாற்றிய ஈரான் துணை வெளியுறவு அமைச்சர், "ஈரான் விரைவில் இதற்கு பதிலடி கொடுக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். "நாம் இதற்கு பதிலடி கொடுப்போம் என்பதை அவர்களுக்கு (இஸ்ரேல்) சொல்லிக் கொள்கிறேன். ஆனால் அதற்கான காலம், இடம் மற்றும் வலிமை குறித்து விரைவில் தீர்மானிப்போம்" என்று அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.