Header Ads



ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கான புதிய தலைவரை நியமித்த ஐ.எஸ். இயக்கம்

எகிப்து ஐமன் அல் ஜவாஹிரியின் தலைமையில் இயங்கிவரும் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருக்கும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தில் இருந்து விலகிய ஏராளமானோர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தில் இருந்து விலகுவதாக அவ்வியக்கத்தின் ஓரக்சாய் பகுதி செய்தி தொடர்பாளரான ஹபீஸ் சயீத் கான் என்பவர் அறிவித்திருந்தார். அவரோடு மேலும் பலரும் தலிபான் இயக்கத்தில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில், ஹபீஸ் சயீத் கானை குராசான் (ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்குட்பட்ட சில பகுதிகளை அரேபியர்கள் குராசான் பகுதி என்று முன்னர் குறிப்பிட்டு வந்தனர்) பகுதிக்கு தலைவனாக நியமித்துள்ளதாக ஐ.எஸ். இயக்கத்தின் தளபதி அபு முஹம்மது அல் அட்னி அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.