Header Ads



ஓட்டமாவடியில் ஆட்டோ கட்டணம் குறைந்தது

-அனா-

புதிய அரசாங்கத்தால் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குள் உள்ள முச்சக்கர வண்டிகளின் வாடகைப் பணத்தை குறைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு அரங்கில் இடம் பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தல் பிரதேசத்திற்குள் உட்பட்ட நூற்றுக்கணக்கான முச்சங்கர வண்டி சாரதிகள் கலந்து கொண்டனர்.

தற்போது எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பொது மக்களினது வருமாணங்களையும் வாழ்க்கைச் செலவையும் கருத்திற் கொண்டு ஆட்டோக்களின் கட்டணங்களை குறைந்த தொகையாக பெற்று வந்த எழுபது (70.00) ரூபாவை ஐம்பது (50.00) ரூபாவாக குறைப்பது என்றும் தூர இடங்களுக்கான கட்டணங்களும் குறைத்து பெறுவது என்றும் ஏகமானதக தீர்மாணிக்கப்பட்டது.



No comments

Powered by Blogger.