Header Ads



ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது உறுதி - இந்தோனேஷிய

ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது உறுதி என இந்தோனேஷிய அதிபர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்தோனேஷியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 8 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கடத்த முயன்ற மையூரன் சுகுமாரன், ஆன்ட்ரூசான் என்ற 2 ஆஸ்திரேலிய வாலிபர்கள், கடந்த 2005–ம் ஆண்டு பாலி விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தோனேஷிய அதிபராக ஜோகோ விடோடோ பொறுப்பேற்ற பிறகு அங்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் பிரேசில் மற்றும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘‘எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் இந்தோனேஷியாவிற்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த நிலையில் இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ ஆஸ்திரேலியாவின் கோரிக்கையை நிராகரித்து உள்ளார்.

இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘இந்தோனேஷியாவில் போதைப்பழக்கத்தால் ஆண்டுக்கு 18 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். எனவே, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அவர்கள் பொதுமன்னிப்பு கேட்கலாம். ஆனால் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பொதுமன்னிப்பு கிடையாது’ என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.