Header Ads



விமானத்தில் பறக்கும் போது, நெஞ்சு வலி வந்தால்..?

துபாயில் இருந்து ஜஹர்த்தா என்கிற இடத்துக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அதில், சிரியா  நாட்டை சேர்ந்த தொழிலதிபர் முகமது பிலால் (42) என்பவர் உள்பட 164 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் சென்னை வான்வெளியை  கடந்தபோது, முகமது பிலாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் அவர் துடித்தார். இதை பார்த்த விமான பணி பெண்கள், உடனடியாக  விமானியிடம் தெரிவித்தனர். விமானி, அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்தார்.இதையடுத்து, அருகில் இருந்த சென்னை  விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத் தார். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தை  தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கூறினர். 

இதையடுத்து, காலை 11.10 மணிக்கு விமானம் அவசரமாக தரையிறங்கி யது. அங்கு தயாராக இரு ந்த விமான நிலைய மருத்துவ குழுவினர்,  விமானத்தினுள் சென்று, முகமது பிலாலை பரிசோதனை செய்தனர். உடனடியாக மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச் சை  அளிக்க வேண்டும் என கூறினர்.இதை தொடர்ந்து விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், முகமது பிலாலுக்கு அவசர கால விசா வழங்கினர்.  பின்னர், அவ ரை விமானத்தில் இருந்து இறக்கி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.