Header Ads



மெல்லப்பட்ட சுவிங்கத்தை ஆய்வு செய்தபோது, 100 மில்லியன் பாக்டீரியாக்கள்

நெதர்லாந்தில் உள்ள கிரோனின்கென் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சுவிங்கம்  மெல்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். 

5 பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மாணவர்களை கொண்டு  இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு புதினாவுடன் கூடிய சுவிங்கம் கொடுக்கப்பட்டு, 30 விநடிகள் முதல் 10 நிமிடம் வரை மெல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. 

அதன்பின் மெல்லப்பட்ட சுவிங்கத்தை ஆய்வு செய்தபோது அதில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மெல்லும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க பாக்டீரியாக்களின் எண்ணிக்கை  அதிகரிப்பதும் தெரிய வந்தது. மைக்ராஸ்கோப்பில் பாக்டீரியாக்கள் கண்களுக்கு நன்கு புலப்படுவதும்  தெரியவந்தது. 

ஏற்கனவே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், டூத்பேஸ்ட் இல்லாமல் புதிய சுத்தமான வெறும் பிரஷ்ஷை கொண்ட  பல்தேய்த்தபோது பல மில்லியன் பாக்டீரியாக்கள் நீக்கப்படுவது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.