Header Ads



தலிபான்கள் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள், ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் - அமெரிக்கா புதுவிளக்கம்

தலிபன்கள் மற்றும் ஐ.எஸ். குறித்து சர்ச்சைக்குரிய வகையில், வேறுபடுத்தி அமெரிக்க புதிய விளக்கம் அளித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் துணை செய்தி தொடர்பாளர் எரிக் செஜூல்ட்ஸ்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போதுஅவரிடம், கடந்த ஆண்டு  தலீபான்கள் பிடியில் இருந்து அமெரிக்க வீரர் போவ் பெராகாதால் மீட்க அமெரிக்க மேற்கொண்ட அதே முறையத்தான், தற்போது ஐ.எஸ் வாதிகளின் பிடியில் சிக்கியுள்ள ஜோர்தான் பைலட்டை மீட்க ஜோர்தான் அரசு மேற்கொண்டு வருகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு பதில் அளித்த அவர்,  தலீபான்கள் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்  சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கிவரும் தீவிரவாத இயக்கம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

தலீபான்களிடம் நடத்தப்பட்ட பேரம் பற்றி அவரிடம் விளக்கமாக பதிலளிக்குமாறு கேட்ட போது, “ தலீபான்கள் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள். எனவே இந்த வகையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார். ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்த தலீபான்கள் கடந்த இரட்டை தாக்குதலுக்கு பின் அமெரிக்க படையினர் விரட்டியடித்தனர்,

இப்போது அமெரிக்கா இவ்வாறு பேசியிருப்பது தலீபான்களுடன் பேச்சுவார்த்தைக்கான தயாராக இருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளதாக இது கருதப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம், பாகிஸ்தானில் உள்ள ராணுவ பள்ளிக்குள் புகுந்த பள்ளிக்குழந்தைகள் உட்பட 150 பேரை சுட்டுக்கொன்றனர். இதற்கு ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் தலீபான்கள்தான் காரணம் என கூறப்பட்டது. 

No comments

Powered by Blogger.