Header Ads



ஜப்னா முஸ்லிம் இணையத்தின் வாக்கெடுப்பை கவனத்தில் கொள்வோம் - SLMC

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவளிக்க வேண்டுமென ஜப்னா முஸ்லிம் இணையத்தின் மூலமாக ஒரு பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

அந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 92 சதவீதமான முஸ்லிம்கள் பொது வேட்பாளருக்கே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டுமென தமது பெறுமதிக்க வாக்குகளை வழங்கியிருந்தனர்.

சுமார் 8 சதவீதமானவர்களே மஹிந்த ராஜபக்ஸவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு நல்க வேண்டுமென வாக்களித்திருந்தனர்.

இந்த வாக்கெடுப்பு தொடர்பாக  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் ஜப்னா முஸ்லிம் இணையம் தொடர்புகொண்டது. இருந்தபோதும் அது பயன் தரவில்லை.

இதையடுத்து முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலியுடன் ஜப்னா முஸ்லிம் இணையம் தொடர்புகொண்டு, வாக்கெடுப்பு முடிவு குறித்து கூறியது.

இதற்கு பதில் வழங்கிய ஹசன் அலி, ஆம் நிச்சயமாக ஜப்னா முஸ்லிம் இணையத்தின் வாக்கெடுப்பு முடிவுகள் குறித்து கவனத்திற் கொள்வோம் என உறுதிபட தெரிவித்தார்.

5 comments:

  1. That's why I told Jaffna Muslim Blog is SLMC's media.

    ReplyDelete
  2. சார் அவர்கள் ஏலவே ஒரு உடன்படிக்கை மூலம் ராஜபக்சவுக்கு ஆதரவு தருவதாக வாக்களித்து விட்டார்கள் விடுங்க சார் சும்மா எங்க தலைவர்களை குழப்பாம

    ReplyDelete
  3. கவனத்தில் கொள்வோம்
    என்று சொல்லியிருக்காரே
    தவிர
    அதற்கேற்ப சாதகமான
    முடிவெடுப்போம்னு
    சொல்லல்லியே..
    அதிலும் அவர்கள்
    பைகள் நிறைய வாய்ப்பிருந்தால்
    ஆமாப் போடுவார்கள்
    இல்லையென்றால் குட் பாய்
    சொல்வார்கள்..
    இதுதானே அவர்கள்
    வழக்கம்.

    ReplyDelete
  4. Yarum mahinthe ku pode koodathu! !!

    ReplyDelete

Powered by Blogger.