Header Ads



திஸ்ஸ அத்தநாயக்க 500 மில்லியனுக்கு விலை போனாரா? இன்னும் சில மணித்தியாலங்களில் புரியும்

(நஜீப் பின் கபூர்)

இன்று பாராளுமன்றம் கூடுகின்றது. வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கொடுப்பும் இன்று நடக்கின்றது. இதனைத் தோற்கடிக்க எதிரணி ஆவலுடன் இருந்தாலும் அது வெற்றிபெற மாட்டாது என்று நாம் உறுதியாகக் முன் கூட்டியே கூறுகின்றோம்.

ஏதிரணிக்குத் தாவிய ஒரிவர் மீண்டும் நிர்பந்தம் காரணமாக ஆளும் தரப்பில் போய் அமர்ந்து தமது கோமாளித் தனத்தை வெளிப்படுத்தவும் இடமிருக்கின்றது. அதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று ஆளும் தரப்பிற்குத் தாவி அதிர்ச்யை ஏற்படுத்தலாம் என்று எமக்குக் கிடைத்த ஒரு தகவல் தெரிவிக்கின்றது.?

சனிக்கிழமை முதல் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க  தலைமறைவாகி இருக்கின்றார். அவர் எங்கிருக்கின்றார் என்பதனைத் தேடிப் பிடிக்க தலைவர் ரணிலுக்கே முடியாமல் போய் இருக்கின்றது. கடைசியாகக் கிடத்த தகவல் படி அவர் தனியார் வைத்தியசாலை ஒன்றில்  வெளித் தொடர்புகளைத் தூண்டித்துப் படுத்திக்கின்றார் என்று எமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றது.

இது பற்றி நாம் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர் ஒருவரைத் தொடர்பு கொண்ட போது திஸ்ஸ அத்தநாயக்காவின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள முடியாதிருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டார். தனக்கு நெருக்கமான ஓரிருவருடன் இவர் இன்று ஆளும் தரப்பில் போய் திஸ்ஸ அமரலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.  

1 comment:

  1. மக்கள் பணம்
    எப்படியெல்லாம்
    விளையாடுகிறது?

    ReplyDelete

Powered by Blogger.