Header Ads



ISIS இல் ஜேர்மன், சுவீடன் இளைஞர்கள்

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்கு தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து தனிநாடு உருவாக்கியுள்ளனர். தங்களுக்கென்று தனியாக ராணுவம் அமைத்துள்ளனர்.

அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேருகின்றனர். பெண்களும் இந்த அமைப்பில் இணைகின்றனர். சிலர் திருமணம் செய்கின்றனர்.

இந்த நிலையில் மேற்கத்திய நாடுகளான ஜெர்மனி மற்றும் சுவீடனில் இருந்து 1000 இளைஞர்கள் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ளனர். சுவீடனில் இருந்து மட்டும் 400 முதல் 500 பேர் சேர்ந்துள்ளனர்.

தற்போது அவர்கள் சுவீடனில் இல்லை. அங்கிருந்து வெளியேறி விட்டனர். இந்த தகவலை சுவீடன் உளவுத்துறை தலைமை அதிகாரி ஆண்டர்ஸ் தர்ன்பெர்க் தெரிவித்துள்ளார்.

அதே போன்று ஜெர்மனியில் இருந்து வெளியேறி 500–க்கும் மேற்பட்டோர் ஐ.எஸ். களுடன் இணைந்துள்ளனர். இதை ஜெர்மனி மந்திரி டெலிவிஷனில் கூறினார். இவர்களுடன் சில பெண்களும் சிரியா மற்றும் ஈராக் சென்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.