Header Ads



ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வரலாறு காணாத தோல்வியடைவார் - அதாவுல்லா

-Tm-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வரலாறு காணாத தோல்வியடையப்போகிறார் என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திவி நெகும பயனாளிகளுக்கு வீடு திருத்துவதற்கான 2,500 ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கும் வைபவம் அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் சனிக்கிழமை (22) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆசியாவின் ஆச்சிரியம் மிக்க நாயகனாக திகழ்கின்றார். அவருடன் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் அதிகூடிய வாக்குகளை பெற்று மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வருவதற்கு மக்கள் ஆணை வழங்கிவிட்டார்கள். 

அவரது ஆட்சிக் காலத்தில் இலங்கை வரலாறு காணாத அபிவிருத்திகளைக் கண்டுள்ளதோடு, எங்களை நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வைத்துள்ளார். அவரை நாம் மறக்கக்கூடாது.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் எங்களது வாழ்க்கைத் தரம் உயர்வடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யார் எதிர்த்து நின்றாலும் நாம் அவருடனே இருப்போம். கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு தேசிய காங்கிரஸ் முன்னின்று உழைத்தது.

கொடூர யுத்தத்தை ஒழித்தது மட்டுமல்லாமல் வருமானம் குறைந்த மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் பல அபிவிருத்தி திட்டங்களை ஏறற்படுத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினரும் வெளிநாட்டு சக்திகளும் கபட நாடகம் ஆடுகின்றன.

இதை ஒரு போதும் மக்கள் அங்கிகரிக்கமாட்டார்கள். இன்று மக்கள் எல்லோரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கமே உள்ளார்கள.; இதனை நாம் எல்லோரும் ஒற்றுமையாக  செயற்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு முன்வரவேண்டும் என்றார். 

11 comments:

  1. பள்ளிவாசல்களை தாக்கியும் முஸ்லிம்களை அவமானபடுத்தியும் அவர்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ள ராஜபக்சவின் விசுவாசியான இவருக்கு அக்கரைப்பற்று முஸ்லிம்கள் ( இறை விசுவாசிகள்) தேர்தலில் ராஜபக்ச வுக்கு எதிராக வாகளிப்பதன் மூலம் சரியான பதிலளிப்பார்கள் என நம்புகிறோம்.

    ReplyDelete
  2. General Election நடந்தால் வரலாறு காணாத தோல்வி நீர் பெறுவீர்

    ReplyDelete
  3. Athaulla....Dont live in dream, Buddy wake up.

    ReplyDelete
  4. Dont wory Athaulla,very soon Mahinda & co will go home at the same time you you you as well.

    ReplyDelete
  5. ஆ....ஆமைச்சா நல்ல ஜோதிடா;

    ReplyDelete
  6. பள்ளிவாசல்களை தாக்கி, முஸ்லிம்களை அவமானப்படுத்தி, முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி, முஸ்லிம்கள் மற்றும் அப்பாவி மக்களின் உயிர்களை பரித்த. நாய் ராஜபசஷ "எங்களை நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழவைத்தார்" என்று சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா நடிகர் அதாஉல்லா... ? பொது தேர்தல் வரட்டும், பின் உன் நிலமை உனக்கு புரியவரும்.....

    ReplyDelete
  7. asiavin aachchariyam pallikalai udaiththathu muslim kadaikalai udaiththathu muslimkalai aluthgamavil kolai seythathu aachchariyam unakkallaam innum puththi warawe illiya nee allam oru manitha inamaa allathu miruha inama panaththukkaaka koottikkodukkum aalthaan nee pothu elaction warattum unakku irukku aappu

    ReplyDelete
  8. wait and see what will happen. Do not speak like inside a well because you may not know what is happening outside.

    ReplyDelete
  9. அட விடுங்கப்பா அவர் சொன்னதில் ஒரு சின்ன தவருநடந்துபோச்சி மகிந்தைக்கு பதிலாக மைதிரி என்ருகூரிவிட்டார் அவ்வளவுதான்

    ReplyDelete
  10. ஒருபோதுமில்லாதவளவுக்கு முஸ்லிம் காக்காக்கள் மகிந்தவுக்கு ஆதரவாக இப்போதிருந்தே குரல் கொடுக்க தொடங்கிவிட்டார்கள். அங்காலே தாத்தா அஸ்வரும் காதரும் குரல் கொடுக்கிறார்கள் இங்காலே ஹாமதுரு அதாவுல்லாஹ் குரல்கொடுக்கிறார்.

    தன் பெயருக்குள் அல்லாஹ் என்ற சொல்லை வைத்துக்கோண்டு எப்படித்தான் அல்லாஹ்வுக்கு மாறு செய்ய இவர்களுக்கு துணிவு வருகிறதோ தெறியாது. அதாவு + அல்லாஹ்= அதாவுல்லாஹ்.

    கள்ள வாக்குகளாலும் மோசடிகளாலும் மகிந்த வேண்டுமென்றால் வெற்றி பெறுவார், தவிர, ஜனனாயகத்தின் அடிப்படையில் அல்ல.

    கடந்த பொதுத்தேர்தலில் இந்த அதாவுல்லாஹ் தோற்று, மின் துண்டிக்கப்பட்டு மீண்டும் வந்த வேளை வெற்றியோடு வாக்குகள் எண்ணும் நிலையத்திலிருந்து திரும்பினார். அப்படி, கள்ள வாக்குகள் இவருக்கும் இவரின் மகிந்தவுக்கும் நல்ல பலக்கம்.

    இவருடைய மாவட்டமான அம்பாறையில் மாத்திரம் பள்ளிகள் உடைக்கப்பட்டால் மட்டுமே குறல் கொடுப்பேன் என வெளிப்படையாக பேட்டி கொடுத்தவர் இந்த அதாவுல்லாஹ்.

    நின்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழவைத்தவர் மகிந்த என்கிறார்,அது உண்மைதான், இவரும் இவருடன் இருப்பவர்களும் மட்டுமே அப்படி நின்மதியாக பாதுகாப்பாக வசதியாக வாழ்ந்தவர்கள்.

    சொல்லமுடியாதளவுக்கு இலங்கையின் பணப்பெருமதியில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது, அபாயத்தில் மாட்டிக்கொண்டவர்களைப்போல் எங்கு பார்த்தாலும் மக்களின் அவல குறல்களே ஒலிக்கிறது,ஒன்றுமில்லை,...வருமை...எவ்வளவுதான் உழைத்தாலும் மாதாந்த செலவுக்கு மக்களிடம் போதுமான காசு கையிலில்லை.பொருளாதாரத்தில் மொத்தத்தில் இலங்கையை பாதாழத்திற்குள் தள்ளியவர் மகிந்தவுக்கே இவர்கள் விளக்கு பிடிக்கிறரர்கள்.

    தகுதியற்றவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் பொருப்புக்கள் ஒப்படைக்கப்படும் என்பது இருதி நாளின் அடையாளங்கலில் ஒன்று என்பதை அதாவுல்லாஹ்வும் ஏனைய முஸ்லிம் அரசியல் வாதிகளும் மகிந்தவும் நிருபித்துவிட்டார்கள்.

    ReplyDelete
  11. தேர்தல் நியாயமான முறையில் சென்றமுறை நடந்திருந்தால், ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச வந்திருக்க முடியாது, அதே தவறை இந்த முறையும் அவர்களை செய்ய விடக்கூடாது, யாரைக்கொன்றாவது ஆட்சியைப்பிடிக்கவேண்டும் அதற்காக அவர்கள் எதையும் செய்யத்தயாராக இருக்கின்றார்கள் இந்த நிலைமையை உணர்ந்து இதிலிருந்து எப்படி எதிர்கட்சிகளின் வாக்குகளை பாதுகாத்து தேர்தல் முடிவை உண்மையான முடிவை தெரிவிக்கவேண்டும் என்பதற்காக நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் மிகவும் உன்னிப்பாக செயற்படவேண்டும். இதுதான் முக்கியம்.

    அதேவேளை முஸ்லிம்களுக்கு நல்லது செய்யவில்லையே என்று பெருமளவிற்கு குறை கூறியதில்லை இருப்பினும் முஸ்லிம்களுக்கு மறைவாக பல பாதக செயல்களைச்செய்த்த இவ்வரசாங்கத்தை எந்தவொரு முஸ்லிமும் ஆதரிக்காது, அவன் சுய நல வாதியாக இருந்தால் தவிர, மகிந்த ராஜபக்ச வெல்வதும் தோற்பதும் இறைவன் தீர்ப்பு ஆனால் முஸ்லிம்களின் வாக்குகளை யாருக்கு போடவேண்டும் என்று சொல்லும் உரிமை முஸ்லிம்களின் உரிமையைப்பாதுகாக்காத, முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத எந்த அரசியல்வாதிக்கும் உரிமை கிடையாது, ஒன்று மட்டும் உண்மை சென்ற காலங்களின் பள்ளிகள் உடைக்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டபோது நாம் கேட்ட பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ் நல்லதொரு தீர்ப்பை தருவான் என்று அல்லாஹ்விடம் பாரம் கொடுதுள்ளோம் எல்லாவற்றிற்கும் அவனே போதுமானவன்.

    ReplyDelete

Powered by Blogger.