Header Ads



அமெரிக்காவை தாக்கிய பனிப் புயுல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த சில நாட்களாக கடும் பனிப் புயல் வீசுகிறது. இதன் காரணமாக, இங்குள்ள பபெலோ நகரில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில், 7 அடி வரை பனி படிந்துள்ளது. வீடு, கார், மரம், சாலை ஆகியவை பனிப் போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கின்றன. இதனால், சாலைகளில் எதிரில் வருபவரைக்கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பனிப் புயலுக்கு இதுவரை, 10 பேர் பலியாகியுள்ளனர். இங்கு நடக்கவிருந்த கால்பந்து உள்ளிட்ட, பல்வேறு விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் படிந்துள்ள பனியை அகற்றும் பணியில், 5,000க்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அடுத்த சில நாட்களில், பனிப் புயலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.