Header Ads



எதிர்கால அரசியலை நோக்கி..!

இந் நாட்டை ஆண்டுகொண்டிக்கின்ற அதிகாரம் செறிந்த  பெருன்பான்மை சமூகத்தின் இரு தேசிய கட்சிகளுடன்  இம்முறை நடை பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை பிறழவைத்து  இந் நாட்டில் வாழ்ந்து கொண்டிருகின்ற அனைத்து சமூகங்களையும் குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகத்தவர்களை அவர்களின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை ஏற்படுத்துவதோடு சக வாழ்வுக்கான உத்தரவாததையும் வழங்கி  இந்தாட்டில் புதுவடிவமைப்பான  ஒரு அரசியல் கலாசாரத்தை  மேற்கொண்டு அதன் மூலம் இந் நாட்டில்
வாழ்கின்ற  அனைத்து சமூகங்களும்  நாட்டுப்பற்றுள்ள பிரஜைகளாக வாழவும் அதே நேரம் இந் நாட்டின் பொருளாதார வளச்சியை கட்டியெழுப்ப முடியும் என்ற நோக்கிலே இரு அரசியல் கட்சிகளான slfp/unp  ஆதரவாளர்கள் களம் இறங்கியிருப்பது,  இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதுத்திருப்புமுனையை ஏற்படுத்த கூடும் என்பதாக பல அரசியல் நிபுணர்கள் மற்றும் நடுநிலை போக்கை கடைபிடிக்கின்ற அரசியல் அவதானிகள் புத்தி ஜீவிகள் கூறுவதை அவதானிக்க முடிகின்றது.

இந்தநாட்டு சகல இன மதத்தவர்களுக்கும் ,இன மத வேறுபாடுகலுக்கப்பால், இந்நாட்டின் சகல இனத்தவர்களும் சகவாழ்வுடன் வாழவேண்டும் என்ற அனைத்து சமூகங்களிலும் உள்ள அனவருக்கும் பொதுவாகக்கிடைத்துள்ள இந்த ஜனாதிபதித்தேர்தல் மூலம் இந்த நாட்டின் தலை விதியை மாற்றுவதற்கான பெரும்  சந்தர்ப்பம் இது தான் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது  இது போன்ற ஒரு சந்தர்ப்பம் இதன் பின் ஏறபடப்போவதில்லை என்பதையும் மனதில் கொண்டு செயல்படுவது அவசியமாகும் 

 இந்நாட்டு அனைத்து மக்களுக்கும் சகவாழ்வுடனான அரசியல் உரிமைகள் மற்றும் விமோசனம் கிடைக்க வேண்டுமாக இருந்தால் சிறுபான்மை சமூகமான தழிழ் முஸ்லிம் மக்கள் தமது கட்சி தலைமைத்துவத்துக்கு அப்பால் நின்று பொது ஜனாதிபதி  வேற்பாளருக்கு தமது பூரன ஆதரவினை வழங்குவதே காலத்தின் அவசியாமகும். 

கடந்த ஊவா மாகாண தேர்தலில் சிறுபான்மை கட்சியான slmc மேற்கொண்ட அரசியல் வியூகம்  மூக்கை நுளைத்து உடைத்துகொண்டது போல்...  இருந்தாலும் அது பெரும் தோழ்வியாக இருக்க முடியாது. இதனை போன்ற ஒரு ராஜதந்திரமான ஒரு விடயமே  எம்மை எதிர் நோக்கியுள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்தவர்கள் தமது கட்சிகளின்  தலைமைத்துவத்திற்கு மாறாக, பொது ஜனாதிபது வேற்பாளருக்கும், சிறுபான்மை கட்சிகலின் தலைமைத்துவம் அரசாங்கத்துக்கும்  ஆதரவு வழங்கி, இந்னாட்டில் புது வடிவிலான ஒரு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்தாகும். இது வெற்றி தோழ்விக்கு அப்பால் சிறுபான்மை சமூகம் என்றும் வெற்றியை உறுதிப்படுத்தும். இவ்வாறு நடந்த கொண்டால் சிறுபான்மை கட்சிகளின் தலைமைத்துவம் கண்மூடித்தனமாக முடிவுகள் எடுக்காது, கட்சியின்  பொது மக்களிலே தங்கி நிற்பார்கள். அந்தந்த கட்சிகளிலே கட்சி மாறாது தலைமைத்துவத்தும் பொதுமக்கள் மீது விசுவாசமாக செயல்பட நேரிடும்.

மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற அந்தந்த கட்சிகளின் பிரதி நிதிகளை விலை கொடுத்து வாங்கவும் முடியாத நிலை ஏற்படும். பொது மக்களின் ஆதரவிலே அனைத்து அரசியல் வாதிகளும் தங்கி ஊழல்/ இலஞ்சம் அற்ற ஒரு அரசியல் கலாசாரத்தை இந் நாட்டில் உறுவாக முடியும் என நினைக்கிறேன்.  

 அபு சகீக்

No comments

Powered by Blogger.