Header Ads



மஹிந்த ராஜபக்ஸவை கொள்ளைக்குழு தலைவனுடன் ஒப்பிட்ட அநுரகுமார

அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் ஜனாதிபதியிடம் கோவைகள் இருப்பின் ஏன்? அவர்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜே வி பி கேள்வி எழுப்பியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் தொடர்பில் தம்மிடம் கோவைகள் இருப்பதாகவும் எனினும் தாம் பழிவாங்கப்போவாதில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று கூட்டம் ஒன்றில் எச்சரித்திருந்தார்.

இந்தநிலையிலேயே ஜே வி பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தமது கேள்வியை இன்று 24-11-2014 நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.

போர் முடிந்த பின்னர் நாட்டில் ஊழல்களை ஒழிக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எனவே குறித்த கோவைகளை கொண்டவர்களுக்கு எதிராக ஏன்? ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை என்று திஸாநாயக்க கேட்டார்.

கொள்ளைக்கூட்டத் தலைவன் கொள்ளையர்களை பாதுகாப்பது இயல்பு. அந்த கொள்ளையர்கள் இல்லாமல் கொள்ளைக்குழு தலைவனுக்கு சீவிக்கமுடியாது.

எனவேதான் கொள்ளையர்களை கொள்ளைக்குழு தலைவன் பாதுகாக்கிறான் என்று அநுரகுமார சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.