Header Ads



''மைத்திரிபால சிறிசேனாவை முஸ்லிம்கள் நம்பலாம்''

எம் எஸ் எம் பைரூஸ்  ஹாஜியார்.
மேல் மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்,
ஐக்கிய தேசிய கட்சி மத்திய கொழும்பு அமைப்பாளர்

பொது வேட்பாளராக மைத்ரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டது முதல் இணைய தளங்கள்  மற்றும் பேஸ்புக் பக்கங்களிலும் மைத்ரிபால சிறிசேன முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளின் போது வாய்திரக்காமல் கைகட்டி பார்த்துக்கொண்டிருந்ததாகவும் இவரை முஸ்லிம்கள் எவ்வாறு நம்புவது என்றும் பலர் கருத்து வெளியிட்டுவருவதை காணமுடிகிறது.. முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பவர்கள் என தம்மை கூறிக்கொள்ளும் சிலரும் இது போன்ற விஷம கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

மைத்ரிபால சிறிசேன அவர்களின்  நாற்பத்து ஏழு வருட அரசியள் வாழ்கையில்  இதுவரை சிறுபான்மை இனங்களின் மனம் வேதனை படும் அளவுக்கு எந்தொரு கருத்தையும் வெளியிடவில்லை   மைத்ரிபால சிறிசேன என்பதை இந்த கருத்துக்களை பதிபவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். அதே போல சிறுபன்மையினருக்கு எதிராக அத்துவித அடக்குமுறைகளையும் மேற்கொள்லாதவர். மேலும் எதிர் கட்சிகள் அதிலும் சிறுபான்மை கட்சிகள் பொது வேட்பாளராக இவரை ஏகமனதாக தெரிவு செய்ய இதுவும் ஒருகாரணம் என்பதையும் இவர்கள் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்.

இது தவிர தன்னை எதிர்கட்சிகள் பொது வேட்பாளராக தெரிவு செய்துள்ளதாக அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக மாநாட்டில் நான் கடந்த ஐந்து வருடங்களாக கைகள்கட்டப்பட்ட நிலையில் மிகுந்த மன அழுத்தத்துடனும் இருந்தாக கண்ணீர் மல்க தெரிவித்து அவரின் ஆள் மனதில் இருந்து வெளிப்பட்ட ஒன்றாகும். அதனை நான் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை அந்த ஊடக மாநாட்டை ஏற்பாடுகளை மேற்கொள்ள  போருப்பளிக்கப்பட்ட ஒருவனாக நேரில் கண்டேன் .

அரசாங்கமே பொதுபல சேனாவை இயக்குகிறது என்ற சந்தேகம் அனைவருக்குள் இருக்கும் ஒரு வலுவான சந்தேகம் அப்படியான ஒரு நிலையில் கைககள் கட்டப்பட்டிருந்த பெயரளவில் இருந்த ஒரு கட்சி பொது செயலாளருக்கு என்ன கண்டனம் தெரிவிக்க முடியும் என்பது அரசியல் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் .

கம்பெடுத்தவன் எல்லாம் வேட்டை காரன் என்பது போல இன்று பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் எல்லோரும் கருத்து சொல்பவர்கள் ஆகிவிட்டார்கள். இது ஆரோக்கியமான விடயம்தான் என்றாலும் கருத்துக்களை பதிவிடமுன் தீர ஆராய்ந்து கருத்து வெளியிட கற்றுக்கொள்ளவேண்டும் .

மைதிரிபால சிறிசேனவை போதுவேட்பாளராக களமிறக்கியுள்ள எமது ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் முஸ்லிம்களின் நலனில் அக்கறையுடன் செயற்பட்டுவந்த கட்சியாகும் நாம் எப்போதும் முஸ்லிம் விரோதிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்பதனை எமது வரலாறு சான்று பகரும்.

No comments

Powered by Blogger.