Header Ads



பெண்களை பயன்படுத்தி வாகன வர்த்தகம் - பொலிஸார் எச்சரிக்கை

பெண்களை பயன்படுத்தி வாகன வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குத்தகை அடிப்படையில் வாகனம்; பெற்று கொள்ள முடியும் என பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரங்களை பயன்படுத்தியே இந்த வர்த்தகம் முன் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத வாடகை அடிப்படையில் வாகனத்தை பெற்று, போலி ஆவணங்களை தயாரித்து அவற்றை அடகு வைக்கின்றமை இனங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிதி பெற்று கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனிடையே, அடகு வைக்கப்பட்ட பல வாகனங்களை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் ராகம, வத்துகாமம், வத்தளை, எம்பிலிபிட்டிய, மற்றும் மொனராகலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.