Header Ads



மன்னாருக்கு அவுஸ்திரேலிய மாடுகள் வேண்டும் - றிசாத் தலையிட வேண்டும்

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

அவுஸ்ரேலிய அரசுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு செய்து கொண்ட உடன்படிக்கைக்கு இணங்க சிறந்த இனக் கறவைப்பசுக்கள் 20000 தருவிக்கப்பபவுள்ளன.மகிந்ந சிந்தனைத் திட்டத்தின் அடிப்படையில் விவசாயிகளின் பொருளாரத்தை மேம்படுத்துவதற்காக இச்செயற்றிட்டம் அமுல்ப் படுத்தப்படவுள்ளது. இதனூக எமது நாட்டின் சுய  பாற்தேவையும் பூர்த்தி செய்யப்படும்.

கால் நடைவளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் என்ற அடிப்படையில் 1990ல் பலவந்த வெளியேற்றத்தின் போது 1000 கணக்கான கால்நடைகளை இழந்த, பலவந்தமாக வறுமைகோட்டின் கீழ் இழுக்கப்பட்ட முசலிப்பிரதேச முஸ்லிம் மக்களுக்கும் கால் நடைகள் வழங்கப்பட வேண்டும் என இம்மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. யுத்தத்திற்கு முன்பு இவர்களிடம் அதிகமான கால்நடைகள் இருந்தமை யாவரும் அறிந்ந விடயமே உதாரணம்: பண்டாரவெளி, அகத்திமுறிப்பு, பொற்கேனி, வேப்பங்குளம், முசலி, வாரிவெளி, பூனொச்சி, புதுவெளி, கொண்டச்சி, மறிச்சுக்கட்டி 

அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள்  இவ்விடயத்தில் தலையிட்டு இம்மக்களுக்கு கறவைப்பசுக்களை பெற்றுக் கொடுப்பார் என நம்புகிறோம்

No comments

Powered by Blogger.