Header Ads



கருமலையூற்று பள்ளிவாயல் உடைப்பு விடயத்தில் பாதுகாப்பு செயலாளரின் நிலைப்பாடு என்ன..?

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கையில் முஸ்லிம்களின் மத உரிமைகளை கேள்விக்குள்ளாக்கி அவற்றை மறுக்கும் மன நிலையை உருவாக்குவதில் சிங்கள பௌத்த தீவிரவாதிகள் தொடராக செயற்பட்டு வருகின்றனர்.

முஸ்லிம்கள் அன்மைக்காலமாக எதிர் நோக்கி வருகின்ற பல்வேறு மதரீதியான பிரச்சினைகளின் பிண்ணனியில் பௌத்த தீவிரவாதிகள் செயற்பட்டு வருவது நாடறிந்த உண்மையாகும். இவர்களுக்கு பக்க பலமாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருப்பதாகவும் அவ்வப்போது குற்றம் சாட்டப்பட்டார்  இக்குற்றச் சாட்டை பாதுகாப்பு செயலாளர் மறுத்தும் வருகிறார்.

தற்போது கருமலையூற்று பள்ளிவாளல் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிவாலை இரானுவமே உடைத்ததாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்விவகாரம் தொடர்பான கிழக்கு மாகாண அமர்வில் இவ் இரானுவம் மீதான குற்றச்சாட்டு மீள வலியறுத்தப்பட்டுள்ளது இரானுவம் இப்பள்ளிவாயலை உடைத்திருந்தால் இவ் உடைப்பு விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளரின் நிலைப்பாடு என்ன? இவர் இதை அறிந்திருந்தாரா? அல்லது இரானுவம் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றதா? அல்லது பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடன் இவ் உடைப்பு இடம் பெற்றதா? பௌத்த தீவிரவாதிகள் இராணவத்திற்குள் ஊடுருவியுள்ளனரா? அல்லது சிறுபான்மை மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்படும் நிகழ்ச்சி நிரலில் இதுவும் ஒன்றா போன்ற கேள்விகள் முஸ்லிம் மக்களின் மனங்களில் கிலேசங்களை ஏற்படுத்தியுள்ளன.

முஸ்லிம்களின் மனக்கிலேசங்களை அகற்றி அவர்களின் சொந்த மண்ணி;ல் நிம்மதியாக வாழ ஜனாதிபதி அவர்களே வழி செய்ய வேண்டுமென  அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Br. Hussain:
    Pl let someone correct your English before you publish, as there are many mistakes.
    Thks

    ReplyDelete

Powered by Blogger.