Header Ads



ஹமாஸ் தாக்குதலில் 4 வயது இஸ்ரேல் குழந்தை பலி - தக்க பதில் தரப்படும் என்கிறான் பென்ஜமின்

தெற்கு இஸ்ரேல் பகுதியில், ஹமாஸ் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 4 வயது குழந்தை பலியானதாக இஸ்ரேல் செஞ்சுலுவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஸா முனையிலிருந்து, நேற்று இரவு தெற்கு இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் நடத்தியத் தாக்குதலில், மழலையர் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த கார் தகர்க்கப்பட்டது. இதில் காரில் இருந்த 4 வயது குழந்தை பரிதாபமாக பலியானதாக இஸ்ரேல் செஞ்சுலுவை சங்கத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்மின் நெதன்யாகு விடுத்துள்ள எச்சரிக்கையில், "ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதில் தரப்படும்" என்றார்.

காஸா - இஸ்ரேல் இரு தரப்பிலும் நடந்துவரும் பிரச்சினையில் எகிப்து தலையிட்டு, போர் நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் இரு தரப்பினருக்கும் உடன்பாடி ஏற்படவில்லை.

கடந்த இரு மாத காலமாக தொடர்ந்துவரும் தாக்குதல்களில், காஸாவில் நடந்துவரும் போரில் 469 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவம் தரப்பில் 64 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டு குழந்தை ஒன்று தற்போது பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. what about those thousands of children killed by Israelis in Ghaza

    ReplyDelete
  2. ஜப்பான் டோக்கியோ நகரில் உள்ள பவுத்த கோவில் ஒன்றில் காசா குழந்தை களுக்காய் ஆத்மா பூஜை ஒன்று இடம்பெற்றது .. அதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குழந்தைகள் கலந்து கொண்டு குறந்தைகளின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்தனை புரிந்தனர் ...இந்த பூஜைக்கு கொண்டு வந்த பொருட்கள் என்ன தெரியுமா.?? ..குழந்தைகளின் சாப்பாத்துககள், பாடசாலை உடுப்புகள், புத்தகங்கள், புத்தக bag கள், மற்றும் பால் மா, சூப்பிகள், போனிக்கா... என்பனவாகும் ....இவைகள் காலக்கிரமத்தில் காசாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஏட்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள் ...

    எங்கடா எங்கட அரபி ஆசாமிகள் ....??

    ReplyDelete
  3. Ivenuhalai arabi muslim brother entru sollave vedmairukku oru kulanthai maraniththhathtku Mr. Netanyahu kofappaduhintar enththanai muslim kulanthaihalai palastin il isreil kolaiseithullathu athaikekkayarumaillai muslimkalin blood enna vera nirama irathha veriyerhala

    ReplyDelete

Powered by Blogger.