Header Ads



ஹக்கீம், அதாவுல்லா, ஹரீஸ், பைசல் காசிம், உதுமாலெப்பை ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள காரமான மிளகாய் சவால் (வீடியோ)

ஐஸ் வாளி சவால் - Ice Bucket Challenge இனைப் போன்று மக்கள் நண்பனாகிய நான் அம்பாறை மாவட்ட ஒரு சில முக்கிய அரசியல்வாதிகளிடத்தில் ஒரு சவாலை விடுக்கின்றேன்.  

அதுதான்  Hot chilli challenge அதாவது மிகவும் காரமான 2 மிளகாய்களை சாப்பிடுவது. 

ஐஸ் வாளி சவால் - Ice Bucket Challenge ஆனது நரம்பியல் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிக்கும் பொருட்டு ஒரு தொண்டு நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த ஐஸ் வாளி சவாலில் தண்ணீரை வீண்விரயம் செய்கிறார்கள் என்பதற்காக நான் அவ்வாறு அல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக எனது சவாலை விடுக்கின்றேன்.

நான் இந்த சவாலினை ; உள்ளுராச்சி சபைகள் அமைச்சர் அதாவுல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை, கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் முஸ்லிம் காங்ரஸ் தலைவரும், நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களிடத்திலும் விடுக்கின்றேன்.

இவர்கள் அனைவரும் இன்னும் 48 மணித்தியாலத்துக்கு இடையில் நான் இந்த வீடீயோவில் செய்வது போன்று இரண்டு காரமான மிளகாய்களை எடுத்து அதனை பகிரங்கமாக உண்டு காட்ட வேண்டும் அவர்கள் தவறும் பட்சத்தில் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதனை நிறைவேற்றித் தர வேண்டும்.

என்னுடைய கோரிக்கை என்னவென்றால் மாவடிப்பள்ளிப் பாலத்தினை அவிவிருத்தி செய்வதாகும்.

இந்த மாவடிப்பள்ளி பாலத்தினால் மக்கள் நாளாந்தம் படும் அவதிகள் சொல்லில் அடங்காதவை. மழை காலம் வந்தால் அந்த வீதியினுாடக நடைபெறும் அத்தனை போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விடும். அம்பாறைக்குச் செல்வதாக இருந்தாலும் சரி, கல்முனைக்குச் செல்வதாக இருந்தாலும் சரி அந்தப் பாதை மக்களுக்கு மிகவும் பிரயோசனமானதாக இருக்கின்றது ஆனால் அந்தப் பாலத்தின் அவலம் மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது.

மழை காலத்தில் பலபேரது உயிர்களையும் காவு கொண்ட அந்தப் பாலத்தை இன்னும் அரசியல்வாதிகள் யாரும் கண்டு கொள்ளாது இருக்கின்றார்கள், பல தடவைகள் அது சம்பந்தமாக முறையிட்டும் எதுவித பலனும் இன்னும் கிட்டவில்லை. நானே இது பற்றி பலமுறை பதிவிட்டிருக்கின்றேன்.

என்னுடைய Hot chilli challenge யின் நோக்கமே அந்த மாவடிப்பள்ளிப் பாலத்தினை அபிவிருத்தி செய்வதற்கான விளிப்புணர்வை உண்டு பண்னுவதே ஆகும்.

மிளகாய் சாப்பிடுவதென்பது ஒரு சாதாரணமான விடயமாக இருந்தாலும் இந்தப் பாலத்தின அபிவிருத்தி செய்து தரும் படி அரசியல்வாதிகளுக்கு வித்தியாசமான முறையில் விளிப்புணர்வூட்ட நான் மேற்கொள்ளும் ஒரு சிறிய முயச்சியே இதுவாகும்.

ஆகவே நண்பர்களே..!!! நீங்கள் எனக்குச் செய்வதெல்லாம் இந்த வீடியோவை அத்தனை பேருக்கும் செயார் செய்யுங்கள இது சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் எட்டி அதன் மூலம் இந்தப் பாலத்திற்கு ஒரு விமோசனம் கிடைத்தால் அந்த நன்மை உங்களையும் வந்தடையும் இன்சா அல்லாஹ்.

4 comments:

  1. அதாவூள்ளா- என்ன நாங்க ஒன்றுமே பேசாம விட்ட மாவடிப்பள்ளிக்கு கூட பிரதேச சபை கோட்பாக போல....

    ஹக்கீம் - மாக்களுடைய அபிலாசைகளை நாம் மதிக்கிறேம் இந்த அரசில் எங்களால் எதுவும் பன்ன முடியாது

    தம்பி ஹரிஸ்- என்னடா பெரிய வேல செல்லுகிறீர் , எல்லய சுத்தி கம்பி பேலி , கான் புனரமைப்பு மட்டும் என்னால் முடியுமடா

    ReplyDelete
  2. நண்பர்களே...!!! இரண்டு மிளகாய்களைச் சாப்பிடுவததென்பதோ அல்லது ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றுவதென்பதோ ஒரு சாதாரணமான விடயம். இதில் ஒன்றும் சவால் விடுவதற்கு இல்லை.

    ஆனால் இதில் உள்ள முக்கிய விடயத்தை மாத்திரம் நாம் அவதானிக்க வேண்டும். அதுதான் நான் அவர்களுக்கு விடுக்கும் கோரிக்கையான மாவடிப்பள்ளிப்பாலத்தின் திருத்த வேலை.

    அந்தப் பாலத்தின் திருத்த வேலைக்கான விளிப்புணர்வுப் பதிவே இது. இங்கே ஒரு மேம்பாலம் ஒன்று அமைத்து மக்களது குறைகளைப் போக்க வேண்டும்.

    அதுவே எனது கோரிக்கை.

    ReplyDelete
  3. Brother Intha ice bucket ithu oru kafir aarambithu vaitha velai muslim kalahiya neengaluma arambikinteerhal kadaisi kalamvarum sa naj kku San mulathukku mulam utherhalai pinpattjuvarhal enpathu ungal moolam nirufikkapaduhintathu

    ReplyDelete
  4. இது எந்தளவு வெற்றியளிக்கும் என்பது சந்தேகமே, காரணம், ஒரு முக்கியமான விடயம் கேளிக்கையால் பின்போடப்படுமா என்று சந்தேகமாகவுள்ள, இவ்விடயம் நடக்கவேண்டும் என்பதுதான் எமது எண்ணம்.

    ReplyDelete

Powered by Blogger.