Header Ads



'அல்கன்சா' என்ற பெயரில் பெண்கள் படையை உருவாக்கியுள்ள ISIS

ஈராக்கில் தனி நாடு அமைக்கும் வகையில் போர் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு, அல்கன்சா என்ற பெயரில் பெண்கள் படையையும் உருவாக்கி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வௌியாகி உள்ளது.

ஈராக்கில், ஐ.எஸ்,ஐ,எஸ்., என்ற அமைப்பு, அங்குள்ள அரசுக்கு எதிராக போர் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு சிரியாவிலும், ஈராக்கிலும் பல நகரங்களை கைப்பற்றி உள்ளது. ரக்கா, திக்ரித், மோசூல் உள்ளிட்ட பல நகரங்கள் இந்த அமைப்பின் பிடியில் சிக்கி உள்ளன. இதைத் தொடர்ந்து தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைத்து, புதிய நாடாக ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு பிரகடனப்படுத்தி உள்ளது. இந்த அமைப்பில் ஏராளமானோர் உள்ளனர். 

இந்நிலையில், அல்கான்சா என்ற பெண்கள் படையை ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு உருவாக்கி உள்ளது. தங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம் பெண்கள், ஷரியத் சட்டத்தை பின்பற்றச் செய்ய வேண்டியது இந்த பெண்கள் படையின் பணியாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் முக்கிய பிரமுகரான அபு அகம்மது கூறுகையில், 'முஸ்லிம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த பெண்கள் படை உருவாக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைப்பிடிக்காத பெண்களை இந்த படையினர் தண்டிப்பர்.' என்றார். 

மேலும், 'இந்த படையில் சேர்க்கப்படும் பெண்களுக்காக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இவர்கள் ஆண் வீரர்களுடன் இணைந்து பணிபுரியவோ, தங்கவைக்கப்படவோ மாட்டார்கள்,' என்று அபு கூறினர். அல்கன்சா படையில் சேரும் பெண்களுக்கு 200 டாலர்கள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, தவறு செய்யும் பெண்களை கைது செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைத்துள்ள அல்கான்சா பெண்கள் படை செயல்பட துவங்கிவிட்டது என, உள்ளூர் பத்திரிகையாளர் அபு அல் ஹம்சா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

இப்படையினர் சமீபத்தில் ஒரு பள்ளியை சோதனையிட்டனர்.அங்கு, மெலிதான உடை உடுத்தியிருந்த 10 மாணவிகள், 2 ஆசிரியைகள், மற்றும் பள்ளி செயலாளர் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., முகாமில் 6 மணி நேரத்திற்கு அடைத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்றார்.

No comments

Powered by Blogger.