Header Ads



இஸ்ரேலுக்குள் சுரங்கப் பாதை ஊடாக 250 மீற்றர் ஊடுருவிய ஹமாஸ் போராளிகள்

இஸ்ரேல்-காசாவுக்கு இடையில் முழுமையான யுத்த நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த யுத்த நிறுத்தம் பலஸ்தீன நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பலஸ்தீன போராளிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயற்சித்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும் மனிதாபிமான செயற்பாடுகளுக்காக இஸ்ரேல் மற்றும் காசாவில் நேற்று தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த யுத்த நிறுத்தத்தை அடுத்து மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற வீதிகளில் திரண்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் வங்கிகளிலும் மக்கள் குவிந்திருப்பதாகவும் அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட் டுள்ளனர். 

எவ்வாறாயினும் தற்காலிக யுத்த நிறுத்தத்திற்கு முன்னர் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 230 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் கொல்லப்பட்ட பெரும் பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்று ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. 

இதில் நேற்று காலை 13 ஹமாஸ் போராளிகள் சுரங்கப் பாதை ஊடாக தெற்கு காசாவில் இருந்து தெற்கு இஸ்ரேலின் சுபா பகுதிக்கு ஊடுருவி தாக்குதல் நடத்த முயற்சித்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆயுததாரிகள் 250 மீற்றர் வரை இஸ்ரேலுக்குள் ஊடுருவியதாகவும் இவர்களை இஸ்ரேல் யுத்த விமானங்கள் இடைமறித்து தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் லுதினன் கொலனல் பீட்டர் லெர்னர் விபரித்துள்ளார். இந்த தாக்குதலில் ஒரு ஆயுததாரி கொல்லப் பட்டதாக தான் நம்புவதாகவும் ஏனையோர் மீண்டும் காசாவுக்கு தப்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த சம்பவம் குறித்து பலஸ்தீன தரப்பில் எந்த பொறுப்பும் கோரப்படவில்லை. எனினும் இந்த சம்பவம் இஸ்ரேல் மீது பேரழிவு மற்றும் கொடிய விளைவை ஏற்படுத்தும் அபாயம் இருந்ததாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 'தீவிரவாதிகளின் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர நாம் பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம்" என்றும் அவர் உறுதி அளித்தார்.

இஸ்ரேல் தொடர்ச்சியாக காசா மீது வான் தாக்குதலை நடத்திவந்த நிலையிலேயே பலஸ்தீன போராளிகளின் ஊடுருவல் சம்பவம் நிகழ்ந் துள்ளது. 

நேற்று காலை தற்காலிக யுத்த நிறுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இஸ்ரேல் கடந்த புதன்கிழமை இரவுமுதல் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதில் மோதல் நிறுத்தம் ஆரம்பிக்க சற்று முன்னர் கிழக்கு ரபாஹ்வின் மீது இஸ்ரேல் நடத்திய பீரங்கி n'ல் தாக்குதல்களில் அபு+ சுனைமா என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டதோடு மேலும் நால்வர் காயமடைந்தனர். 
தற்காலிக யுத்த நிறுத்தத்தை அடுத்து வங்கியில் குவிந்த பலஸ்தீனர்கள் 
 

மேற்படி தாக்குதலுக்கு உள்ளான ரபாஹ் வீடொன்றில் இருந்து ஒரு பெண் உட்பட மூவரின் உடல்கள் மீட்கப்பட்டதாக காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் கித்ரா குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இஸ்ரேல் தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டனர். இதில் அதிகாலை தொழுகைக்காக பள்ளிவாசல் செல்லும் வழியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் 65 வயது மொஹமத் ஹசுனா மற்றும் மொஹமத் அல் ஹ{த் என்ற இருவர் பலியாகியுள்ளனர். 

தவிர காசாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் பாத்தி ஹம்மத்தின் வீடு மற்றும் காசா நகரில் பெண்களுக்காக கட்டப்பட்டுக்கொண்டிருந்த நலன்புரி நிறுவன கட்டடமும் இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக கடந்த புதன்கிழமை காசா கடற்கரை மீது இஸ்ரேலின் கடற்படை படகுகள் நடத்திய n'ல் தாக்குதல்களில் நான்கு சிறுவர்கள் கொல்லப்பட்டதோடு மற்றும் ஒரு சிறுவன்; படுகாயம் அடைந்துள்ளான். 'இந்த சிறுவர்கள் கடற்;கரையில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்… அனைவரும் 15 வயதுக்கு கீழ்பட்டவர்கள்" என்று 22 வயது அஹமத் அபு+ ஹஸ்ஸரா என்பவர் விபரிக்கிறார். 'முதல் n'ல் தரையில் விழுந்ததும் அவர்கள் ஓட ஆரம்பித்தார்கள். ஆனால் இராண்டாவது n'ல் அவர்கள் மீதே தாக்கப்பட்டது" தனது உடைகளில் இரத்தம் தோய்ந்திருக்கும் நிலையில் ஹஸ்ஸரா ராய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளார். 'இந்த n'ல் தாக்குதல் இவர்களை துரத்தியே நடத்தப்பட்டது" என்று குறிப்பிட்டார். 

இந்த நான்கு சிறுவர்களும் கொல்லப்பட்டதாகவும் ஐந்தாவது சிறுவன் படுகாயம் அடைந்திருப்பதாகவும் உறுதி அளித்த காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் கித்ரா, 'இது ஒரு கோழைத்தனமான குற்றச் செயல்" என்று விபரித்தார். 

இந்த தாக்குதல் நடத்தப்பட்டு பல மணி நேரத்திற்கு பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்ட இஸ்ரேல் இராணுவம், இந்த சம்பவம் துக்ககரமானது என்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பட்டது. ஹமாஸ் தீவிரவாதிகளின் செயற்பாட்டு பகுதி மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் நியாயப்படுத்தப் பட்டுள்ளது. 

எனினும் குறித்த பகுதியில் போராளிகளின் செயற்பாடும் இருக்கவில்லை என்று அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட் டுள்ளனர். 

கடந்த புதன்கிழமை இரவு தொடக்கம் காசா மீது குறைந்தது 37 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. மறுபுறத்தில் குறித்த காலத்தில் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏழு ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இதில் நான்கு ரொக்கெட்டுகள் விவசாய நிலத்தில் விழுந்ததாகவும் எஞ்சியவை இஸ்ரேல் ஏவுகணை பாதுகாப்பு முறை மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பலஸ்தீன போராளிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மோலாக இஸ்ரேல் மீது நடத்தும் ரொக்கெட் தாக்குதல்களில் ஒரு இஸ்ரேலியர் மாத்திரமே கொல்லப்பட்டதோடு பத்துக்கும் குறைவானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே இஸ்ரேல் தொடர்ச்சியாக 10 நாட்கள் காசா மீது நடத்திய தாக்குதல்களில் மொத்தம் 230 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 1,678 பேர் காயமடைந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை தொடக்கம் ஐந்து மணிநேர தற்காலிக யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் மோதலை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள ஐ.நா. சபை விடுத்த கோரிக்கைக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணங்கின. 

இதற்கமைய பலஸ்தீன நேரப்படி நேற்று காலை 10 மணி முதல் மாலை மூன்று மணிவரை இரு தரப்பும் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. எனினும் இந்த யுத்த நிறுத்த காலத்தில் காசாவில் இருந்து மூன்று ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. 

பலஸ்தீன பகுதியில் அவசர உதவிகளை வழங்குவதற்காக தற்காலிக யுத்த நிறுத்த காலம் வலியுறுத்தப்பட்டதாக காசாவுக்கான ஐ.நா.வின் நிவாரண உதவி பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதில் குடிநீர் உணவு மற்றும் குழந்தைகளுக்கான சுகாதாரப் பொருட்களை வழங்குவதே முக்கிய நோக்கமாகும் என்று ஐ.நா. சார்பில் பேசவல்ல கிறிஸ் கின்னஸ் குறிப்பிட்டார். 

தற்காலிக யுத்த நிறுத்த காலத்தில் காசா மக்கள் வங்கிகளின் முன் குவிந்திருப்;பதாகவும் மக்கள் பொருட்களை சேமித்து வைக்க விரைவதாகவும் அங்கிருக்கும் செய்தியாளர்கள் விபரித்துள்ளனர்.

மறுபுறத்தில் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் இராஜதந்திர முயற்சிகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் தொடர்ந்து இடம்பெற்று வந்தது. ஹமாஸ் பிரதிநிதிகள் எகிப்து தலைவர்கள் மற்றும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

மறுபுறத்தில் இஸ்ரேல் பிரதிநிதிகளும் கெய்ரோ சென்று பேச்சுவார்த் தைகளில் ஈடுபட்டிருப்பதாக இஸ்ரேலின் என்.ஆர்.ஜp. இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

காசாவில் யுத்த நிறுத்தத்தை கொண்டுவரும் எகிப்தின் முயற்சிக்கு முழு ஆதரவளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். இதற்கு வெ'pங்டன் முழு இராஜதந்திர ஆதரவையும் வழங்குவதாக கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அவர் குறிப்பிட்;டுள்ளார். 

காசாவில் சிவிலியன்கள் கொல்லப்படுவது குறித்து உலகமே மனவேத னையுடன் இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஒபாமா, அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேலுக்கு தமது மக்களை பயமுறுத்தும் ரொக்கெட் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை இருப்பதாகவும் விலியுறுத்தினார். 

இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையில் முழுமையான யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது. 

நேற்று கூடிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை இந்த யுத்த நிறுத்தத்திற்கு அனுமதி அளித்துள்ளது. எனினும் இந்த யுத்த நிறுத்தம் குறித்து ஹமாஸ் தரப்பில் உடனடியாக எந்த பதிலும் வெளியாகவில்லை.

No comments

Powered by Blogger.