Header Ads



​தேசிய ஷூறா சபையின் அங்குரார்ப்பண ஆலோசனை மன்றம்


தேசிய ஷூறா சபையின் முதலாவது ஆலோசனை மன்றம் ககொழும்பு 06, MICH மண்டபத்தில், தேசிய ஷூறா சபையின் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் தலைமையில் நடைபெற்றது. 

சமூகத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து அவர்களுடன் திறந்த கலந்துரையாடல்களை  நடாத்தி, அவர்களின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் தேசிய ஷூறா சபைக்கும், அதன் அங்கத்துவ அமைப்புகளுக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் பயன் கிட்டும் என்ற  நோக்கிலேயே இந்த ஆலோசனை மன்றம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 

இவ் அங்குரார்ப்பண ஆலோசனை மன்றம் “அளுத்கம வன்முறையும், முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலமும்’ என்ற தொனிப்பொருளில், விரிவான கருத்துப் பகிர்விற்கு களம் அமைத்திருந்தது.

புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், தேசிய ஷூறா சபையின் அங்கத்துவ அமைப்புகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதன் பொதுச் சபை, நிறைவேற்றுக்குழு, மற்றும் செயலக உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது பெறுமதியான கருத்துகளையும், ஆலோசனைகளையும் பரிமாறிக் கொண்டனர். அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
  
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி முன்மொழிவுகள் தொகுக்கப்பட்டு, தேசிய ஷூறா சபையின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு, தேவையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

தொடர்ச்சியாக வெவ்வேறு கருப்பொருட்களில், சமூகத்தில் உள்ள இன்னும் பல முக்கியஸ்தர்களையும் அழைத்து தொடர்ச்சியாக இவ்வாறன ஆலோசனை மன்றங்களை, தேசிய ஷூறா சபை எதிர்காலத்திலும் நடத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.