Header Ads



இஸ்ரேலின் அக்கிரமம் குறித்து காஸா சிறுவர்களின் நேரடி வாக்குமூலம்..!

(GTN)

காஸா நகரத்தின் சிறிய துறைமுகத்தின் தடுப்புச் சுவரை ஏவுகணை தாக்கியபோது நேரம் மாலை 4 மணி. ஒரு சில நிமிடங்களில் பரவிய புகைமண்டலத்தினூடாக நான்கு சிறிய உருவங்கள் ஓடுவது தெரிந்தது. மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தவாகள் நான்கு சிறுவர்கள் என்பது 200 மீற்றர் தூரத்திலிருந்து தெரிந்தது.

துறைமுகத்தின் சிறிய தடுப்பு சுவரை தாவி குதித்த அவர்கள் கடற்கரையூடாக காஸா மோதல் குறித்த செய்திகளை சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த  ஹோட்டலை நோக்கி வரமுற்பட்டனர். கடற்கரையோரத்தில் அமைந்திருந்த வண்ணமயமான கூடாரத்தை தாண்டி ஓடிக்கொண்டிருந்த அவாகள் ஊடகவியலாளர்களை நோக்கி கையசைத்தனர்,

அவ்வேளையே இரண்டாவது எறிகணை அந்த இடத்தில் வீழ்ந்து வெடித்தது, அனேகமாக முதலாவது எறிகணை தாக்குதலிருந்து தப்பியோடுபவர்களை இலக்குவைத்து அது ஏவப்பட்டிருக்க வேண்டும்.அது வெடித்ததும் சுவர் மறைப்பிலிருந்து அதனை பார்த்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் அவர்கள் சிறுவர்கள் சிறுவர்கள் என சத்தமிட்டனர்.

40 நிமிடங்களுக்கு முன்னர் மீனவர்களின் கூடாரங்களுக்குள் ஒடி மறைந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.அவர்களுக்கு 7 முதல்11 வயதிருக்கும், இருவரின் பெயர் முகமட்,மற்றையவாகள் ஜக்கரியாவும், அஹெட்டும் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
காயமடைந்த ஏனைய குழந்தைகள் ஹோட்டலிற்கு கொண்டுவரப்பட்டனர்,ஹமாட் பக்ரின்(11) நெஞ்சில் எறிகணை சிதறல்கள் காணப்பட்டன, மொட்டசமிற்கு(11) காலிலும் தலையிலும் காயங்கள்,காணப்பட்டன. இது தவிர 21 வயது இளைஞன் ஒருவனும் காயமடைந்திருந்தான்.

இந்தக்குழந்தைகளுக்கு அருகில் நின்றிருந்த இன்னொரு நபர் மிக சிரமப்பட்டு ஹோட்டலை வந்தடைந்தார்,அவரது வயிற்றில் பாரிய காயம் காணப்பட்டது, மயக்கமடைந்து பலவீனமான நிலையிலிருந்த அவர் டக்சியொன்றின் மூலமாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார்.

பின்னர் அந்த ஹோட்டலிலேயே காயமடைந்த சிறுவர்களுக்கு முதலுதவியை பத்திரிகையாளர்கள் வழங்கினர். ஒரு சிறுவனின் டீ சேர்ட்டை  அகற்றிய வேளை நெஞ்சில் சிதறல்களால் ஏற்பட்ட பென்சில் தலையளவு சிறிய துவாரம் காணப்பட்டது, காயமடையாத இன்னொரு சிறுவன் அதனை பார்த்ததும் நிலத்தில் வீழ்ந்து அழத்தொடங்கினான். ஊடகவியலாளாகள் காயத்திற்கு மருந்து போட்ட வேளை காயமடைந்திருந்த அந்த சிறுவன் கதறி அழத் தொடங்கினான். மேசைவிரிப்பே ஸ்ரெச்சராக  பயன்பட்டது, புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் அந்த சிறுவனை அம்புலன்ஸில் ஏற்றிஅனுப்பி வைத்ததார்.

புதன்கிழமை மதியம் மருத்துவமனையில் தனது நெஞ்சிலுள்ள எறிகணை சிதறல்களை அகற்றுவதற்காகவும், இன்னுமொரு சத்திரசிகிச்சைக்காவும் காத்திருந்த     ஹமாட் பக்ரின் என்ன நடந்தது என்பதை இவ்வாறு விபரித்தான் ஷஷ எனது அப்பாவிற்கு அங்கு மீன்பிடிபடகொன்றுள்ளது. நாங்கள் அதற்குள் ஒளித்துப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம், அவ்வேளையே நாங்கள் தாக்குதலிற்குள்ளானோம்,எங்களில் ஒருவரை கொன்ற முதல் சத்தத்தை நான் கேட்கவில்லை. கடற்கரையோரமாக ஒடிக்கொண்டிருந்த வேளை  இரண்டாவது சத்தத்தை கேட்டேன் அதில் மேலும் மூவர் கொல்லப்பட்டனர்.''

அவ்வேளை அங்கு வந்த சிறுவனின் தாய் தகிறிட்(35) ஏன் வெளியே சென்றீர்கள் என அதட்டினார், திடீரென சீற்றமடைந்த அவர் அவர்கள் எங்கள் குழந்தைகளை கொன்றுவிட்டார்கள் யார் அதற்கான உத்தரவை வழங்கியது என கேள்வியெழுப்பினார்.

செய்தியாளர்கள் மருத்துவ மனையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த வேளை வயிற்றிலிருந்து குண்டு சிதறல்களை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சையின் பின்னர் முகமட் அபு வட்டாவ் சக்கரநாற்காலியில் கொண்டுவரப்படுவதை கண்டனர்,

இந்த தாக்குதல் இடம்பெற்று 90 நிமிடங்களின் பின்னர் கொல்லப்பட்டவர்களுக்கான இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன, அவ்வேளை பலியான சிறுவர்களின் உறவினர் இவ்வாறு கதறினார்" இது ஈவிரக்கமற்ற படுகொலை, அவர்கள் தாங்கள் மிக நவீன தொழிட்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர் ஆனால் தங்களால் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள் குழந்தைகள் என்பது அவர்களுக்கு தெரியாதது வெட்கக்கேடான விடயம் என்றனர். இஸரேலிய இராணுவம் இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்துவருவதாக தெரிவித்தது. ஆரம்பகட்ட முடிவுகளின்படி ஹமாஸ் இலக்கே தாக்கப்பட்டது என அது நாடாளுமன்றத்தில் தெரிவித்தது, பொதுமக்கள் பலியானதாக வரும் தகவல்கள் துயரமானவை என அது குறிப்பிட்டது.

No comments

Powered by Blogger.