Header Ads



''நாங்கள் பின்னோக்கிச் சென்று மெதுவான மரணத்தை சந்திக்க முடியாது" ஹமாஸ்


இஸ்ரேல் யுத்த விமானங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் காசாவில் ஐந்து பள்ளிவாசல்கள், ஒரு கால்பந்து மைதானம் மற்றும் காலஞ்சென்ற ஹமாஸ் ஆயுதப் பிரிவின் தலைவர் வீடு உட்பட 70க்கும் அதிகமான இலக்குகள் மீது புதிததாக தாக்குதல் நடத்தியுள்ளது. 

பதினைந்தாவது நாளாக இஸ்ரேல் நேற்று செவ்வாய்க்கிழமை காசா மீது நடத்திய புதிய தாக்குதல்களில் மேலும் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்மூலம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 604 ஆக உயர்ந்துள்ளது. 3700 பேர் காயமடைந்துள்ளனர். அதிலும் அதிக பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்களாவர். பெரும்பாலான பெண்கள், சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இஸ்ரேலின் பீரங்கி தாக்குதலில் காசாவின் கிழக்கு எல்லைப் பகுதியில் இருக்கும் பல வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன பொலிஸ் பேச்சாளர் அய்மன் பட்னிஜp குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மத்தியதரைக் கடலில் இருந்து இஸ்ரேல் நடத்திய n'ல் தாக்குதலில் குறைந்தது 19 மீன்பிடி படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. 

இதில் காசா மீது நேற்றைய தினமும் இஸ்ரேல் துருப்புகள் தொடர்ந்து சரமாரியாக பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக காசாவின் கிழக்கு எல்லை பகுதியில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. 

காசா எல்லையில் இருந்து 700 முதல் 800 மீற்றர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் இஸ்ரேல் யுத்த டாங்கிகள் தொடர்ந்து எல்லையை நெருங்கி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. 

இஸ்ரேல் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் யுத்த நிறுத்த மொன்றை ஏற்படுத்தும் முயற்சிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனையொட்டி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அமெரிக்க இராஜhங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி எகிப்து தலைநகர் கெய்ரோவில் உயர்மட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர். 

காசாவில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலக்காகி நேற்றுக் காலை மேலும் இரு இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டனர். இதன்மூலம் கடந்த ஜ{ன் 8 ஆம் திகதி ஆரம்பமான மோதல்களில் பலியான இஸ்ரேல் துருப்புகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதோடு இரு இஸ்ரேல் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

பான் கீ மூனுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் கருத்து வெளியிட்ட ஜோன் கெர்ரி, பலஸ்தீன உயிர்ப்பலி குறித்து அமெரிக்கா கவலையடை வதாகவும் ஆனால் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கான உரிமைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

காசாவுக்கு அமெரிக்கா 47 மில்லியன் டொலர் உதவியை வழங்குவதாக கெர்ரி அறிவித்தார். அவசர உதவியாக இது வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் முன்னணி இராஜதந் திரிகள் கடந்த திங்கட்கிழமை கெய்ரோவை சென்றடைந்தனர். இவர்கள் குறைந்தது இன்று புதன்கிழமை வரை கெய்ரோவில் தங்கி இருந்து எகிப்து பிரதான அதிகாரிகள் மற்றும் அரபு லீக் தலைவர் நபில் அல் அரபி ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். 

பொதுமக்களின் உயிர்ப்பலி அதிகரிப்பதை தவிர்க்க ஹமாஸ் ஆயுததாரிகள் உடன் தீர்மானம் ஒன்றை எடுக்கும்படி அமெரிக்க இராஜhங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி கோரியுள்ளார். அவரை பின்பற்றி அரபு லீக் தலைவர் அரபியும் மோதலை நிறுத்த எகிப்து முன்வைத்திருக்கும் யுத்த நிறுத்த பரிந்து ரையை ஏற்கும்படி ஹமாஸை வலியுறுத்தி யுள்ளார். 

எகிப்து கடந்த வாரம் முன்வைத்த யுத்த நிறுத்தத்தை ஹமாஸ் நிராகரித்திருந்தது. அது சரணடைவதற்கு நிகரானது என்று ஹமாஸ் ஆயுதப் பிரிவு குறிப்பிட்டிருந்தது. 

முன்னதாக ஐ.நா. பாதுகாப்பு சபையும் உடன் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியபோதும் அது ஒரு கடுமையான தீர்மானமாக இருக்க வில்லை. 

எனினும் எந்த உடன்படிக்கையிலும் இணங் குவதற்கு, காசா மீதான முற்றுகையை தளர்த்தவும் பலஸ்தீன கைதிகளை விடுவிக்கவும் ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது. 'மேற்குக் கரையில் அண்மையில் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், முற்றுகை முழுமையாக அகற்றப்பட வேண்டும் இதுவே யுத்த நிறுத்தத் திற்கான நிபந்தனைகளாகும்" என்று ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியான் காசாவில் இருந்து தொலைக்காட்சி ஊடாக தெரிவித்தார்.

'நாங்கள் பின்னோக்கிச் சென்று மெதுவான மரணத்தை சந்திக்க முடியாது" என்று 2006 ஆம் ஆண்டு முதல் காசா, இஸ்ரேலின் முற்றுகைக்கு முகம்கொடுத்து வருவதை ஹனியான் சுட்டிக்காட்டினார். 

ஹமாஸ் அரசியல் தலைவர் காலித் மி'hல் கட்டாரில் கடந்த திங்கட்கிழமை பலஸ்தீன நிர்வாக ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதில் காசா மீதான முற்றுகையை முடிவுக்கு கொண்டுவரவும் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தவும் ஒன்றிணைந்து செயற்பட இருவரும் உறுதிபு+ண்டனர். 

காசாவெங்கும் இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 103 பேர் கொல்லப்பட்டனர். மத்திய காசா நகரின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய ஒரு குண்டு தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். 

அதேபோன்று டைர் அல் பலா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய பீரங்கி தாக்குதலில் ஒரு மருத்துவர் இரு நோயாளிகள் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நோயாளிகள் தான் சிகிச்சைபெற்றுவந்த கட்டிலில் வைத்தே கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனை மீதான தாக்குதலில் குறைந்தது 70 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் குறிப்பிட் டுள்ளனர். 

மருத்துவமனை மற்றும் குடியிருப்பு பகுதி மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் யுத்த குற்றமாகும் என்று எச்சரித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை சுவாதீன சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்றும் கோரியுள்ளது. காசா மீதான தாக்குதல் ஆரம்பமானது தொடக்கம் தமது வீடுகளில் இருந்து வெளியேறிய 100,000க்கும் அதிகமான மக்கள் ஐ.நா.வினால் நடத்தப்படும் 69 பாடசாலைகளில் தஞ்சமடைந்திருப்பதாக ஐ.நா. நிவாரண உதவிகளுக்கான அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

காசா மீது நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் 25 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதில் ஒரு கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் அடங்குவதாக மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. கிழக்கு காசாவின் செய்தூன் பகுதியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் இரு பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கில் பெய்த் ஹனுன் பகுதியில் நடத்தப்பட்ட பிறிதொரு தாக்குதலில் கர்ப்பிணி பெண் ஒருவருடன் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டிருப்பதாக அவசர சேவை பிரிவின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா குறிப்பிட்டுள்ளார். இவர்களது உடல்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்தே மீட்கப்பட்டுள்ளன. 

இஸ்ரேல் தாக்குதல்களால் 121 சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சிறுவர்களுக்கான ஐ.நா. அமைப்பான யுனிசெப் கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்குள் 28 சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக யுனிசெப் கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டிருந்தது. கொல்லப்பட்ட சிறுவர்களில் 80க்கும் அதிகமானவர்கள் 12 அல்லது அதற்கும் குறைந்த வயதுடையவர்களாவர். இதன்படி கொல்லப்பட்ட பலஸ்தீனர்களில் மூன்றில் ஒருவர் சிறுவர்களாவர். 

'அதிக குடும்ப அங்கத்தினருடன் இருக்கும் சிறுவர்கள் அடுத்த நாளே அநாதையாக மாறிவிடுகின்றனர். இது குழந்தைகளை மோசமாக பாதிக்கிறது. தான் வாழும் சூழல், வீடு ஏன் தனது அறை கூட பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு இந்த சிறுவர்களுக்கு ஏற்படுகிறது" என்று சிறுவர்கள் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பின் பலஸ்தீன கிளையைச் சேர்ந்த இவான் கரகாசியன் குறிப்பிட்டார். 

ஹமாஸ் ஆயுதப் பிரிவு இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவரை பிடித்து வைத்திருப்பதாக அறிவித்து இரண்டு தினங்களின் பின் தமது படை வீரர் ஒருவர் காணாமல்போயிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று அறிவித்தது. காசா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலஸ்தீன போராளிகள் ஏழு இஸ்ரேல் வீரர்களை ஏற்றி வந்த கவச வாகனத்தின்; மீது நடத்தி தாக்குதலில் குறித்த இராணுவ வீரர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கருதி வந்தது. இந்த தாக்குதலில் எஞ்சிய 6 இஸ்ரேல் வீரர்களும் கொல்லப்பட்டிருந்தனர். 

ஆனால் ஹமாஸ் ஆயுதப்பிரிவான அல் கஸ்ஸாம் படையணி இஸ்ரேல் வீரரை பிடித்ததாக அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து காசா மற்றும் மேற்குக் கரையில் பலஸ்தீன மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காணாமல்போன வீரரின் பெயர் அரோன் N'hல் என்று இஸ்ரேல் நேற்று உறுதிசெய்தது. தம்மிடம் பிடிபட்டிருக்கும் வீரரின் பெயர் N'hல் அரோன் என்று கஸ்ஸாம் படையணி அறிவித்திருந்தது.

1 comment:

  1. இந்த சவூதி மாடிப் பிட்சை காரர்களிடம் கேக்கிறேன்.. .....காசா மக்கள் இவ்வளவு காலமும் யாராவது பட்டினி கிடந்து செத்தார்களா.??..யாராவது வெளிநாட்டுக்கு போகாமல் இருந்தார்களா.??..மருந்து இல்லாமல் ...ஆய்த்தமே கொண்டுவராமல் இருந்தார்களா.??..எங்களுக்கு எந்த குறையும் இல்லை ...எங்களிடம் போதுமான அனைத்தும் இருக்கிறது என்றுதான் ஹமாஸ் தலைவரே சொல்கிறார் ..ஒரு சுரங்கப் பாதையல்ல .. நூற்றுக் கணக்கான ரகசிய பாதைகள் அவர்களிடம் உண்டு ..நல்ல உள்ளம் படைத்த எகிப்து ராணுவ வீரர்களும்...சீசீ நாயிக்கு தெரியாமல் இந்த வசதிகளை செய்து கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள் ..கடல் வழிகளும் அல்லாஹ்வின் உதவியால் நடந்து கொண்டுதான் இருக்கிறது ...வாஹ்ஹபி குஞ்சுகள் தெரியாவிட்டால் தெரிந்த வர்களிடம் கேளுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.